அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கடற்படையின் தாக்குதல் படகுகள் வெளிநாடுகளுக்கு விற்பனை: விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பம் கைகொடுக்கின்றது

Go down

கடற்படையின் தாக்குதல் படகுகள் வெளிநாடுகளுக்கு விற்பனை: விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பம் கைகொடுக்கின்றது  Empty கடற்படையின் தாக்குதல் படகுகள் வெளிநாடுகளுக்கு விற்பனை: விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பம் கைகொடுக்கின்றது

Post by umadevi Mon Dec 27, 2010 11:37 pm

கடற்படையின் புதிய படகுகளுக்கு வெளிநாட்டுச் சந்தைகளில் கிராக்கி ஏற்படுவதற்கான வாய்ப்புக் கிட்டியுள்ளதாக கடற்படையின் தலைமையகத்துக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுக்கு மேலாக இராணுவம் வியந்து போன இன்னொரு விடயம் தான் அவர்களின் இயந்திரப் படகுத் தொழில்நுட்பமாகும்.

அதன் காரணமாக கடற்புலிகளின் இயந்திரப் படகுகள் மற்றும் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டிருந்த தொழில்நுட்பக் குறிப்புகள் என்பவற்றுடன், இராணுவத்தின் பிடியில் இருக்கும் கடற்புலிகளின் தளபதி சூசையின் நெருங்கிய சகா ஒருவரின் வழிகாட்டுதல் என்பவற்றைக் கொண்டு கடந்த வருடம் தொடக்கம் கொழும்பை அண்மித்த வெலிசறவில் இயந்திரப் படகு தயாரிக்கும் திட்டத்தை கடற்படை ஆரம்பித்தது.

தற்போதைய நிலையில் நூற்றுக்கும் அதிகமான அதிவேகத் தாக்குதல் படகுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கெல்லாம் புலிகளின் அதிவேகத் தாக்குதல் படகுகளின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக தற்போதைக்கு பல நாடுகளில் காணப்படும் தாக்குதல் படகுகளை விட இவற்றின் வேகம் அதிகமாக உள்ளது.

இவற்றைக் கருத்திற் கொண்டு எதிர்வரும் நாட்களில் கடற்படையின் தயாரிப்பான அதிவேக தாக்குதல் படகுகள் வெளிநாட்டுக் கண்காட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. அதன் பின் அவற்றை சர்வதேச ரீதியில் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
umadevi
umadevi
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics
» கடற்படையின் தாக்குதல் படகுகள் வெளிநாடுகளுக்கு விற்பனை
» விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் முல்லைத்தீவில் தொடர்ச்சியாக மீட்கப்படுகின்றன
» விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 352 போ் தடுப்பு முகாம்களில்?
» நோர்வே திரைப்பட விழாவில் சர்வதேசத் திரைப்படங்களுடன் விடுதலைப் புலிகளின் எல்லாளன் திரையிடப்படவுள்ளது
» விடுதலைப் புலிகளின் நிழல் பாராளுமன்றத்தில் இன்னும் படிந்துள்ளது: அமைச்சர் ஜகத் புஷ்பகுமார

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum