கடற்படையின் தாக்குதல் படகுகள் வெளிநாடுகளுக்கு விற்பனை
Page 1 of 1

கடற்படையின் புதிய படகுகளுக்கு வெளிநாட்டுச் சந்தைகளில் கிராக்கி ஏற்படுவதற்கான வாய்ப்புக் கிட்டியுள்ளதாக கடற்படையின் தலைமையகத்துக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுக்கு மேலாக இராணுவம் வியந்து போன இன்னொரு விடயம் தான் அவர்களின் இயந்திரப் படகுத் தொழில்நுட்பமாகும்.
அதன் காரணமாக கடற்புலிகளின் இயந்திரப் படகுகள் மற்றும் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டிருந்த தொழில்நுட்பக் குறிப்புகள் என்பவற்றுடன், இராணுவத்தின் பிடியில் இருக்கும் கடற்புலிகளின் தளபதி சூசையின் நெருங்கிய சகா ஒருவரின் வழிகாட்டுதல் என்பவற்றைக் கொண்டு கடந்த வருடம் தொடக்கம் கொழும்பை அண்மித்த வெலிசறவில் இயந்திரப் படகு தயாரிக்கும் திட்டத்தை கடற்படை ஆரம்பித்தது.
தற்போதைய நிலையில் நூற்றுக்கும் அதிகமான அதிவேகத் தாக்குதல் படகுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கெல்லாம் புலிகளின் அதிவேகத் தாக்குதல் படகுகளின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக தற்போதைக்கு பல நாடுகளில் காணப்படும் தாக்குதல் படகுகளை விட இவற்றின் வேகம் அதிகமாக உள்ளது.
இவற்றைக் கருத்திற் கொண்டு எதிர்வரும் நாட்களில் கடற்படையின் தயாரிப்பான அதிவேக தாக்குதல் படகுகள் வெளிநாட்டுக் கண்காட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. அதன் பின் அவற்றை சர்வதேச ரீதியில் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

devid- மட்டுறுத்துனர்
Similar topics
» கடற்படையின் தாக்குதல் படகுகள் வெளிநாடுகளுக்கு விற்பனை: விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பம் கைகொடுக்கின்றது
» பொலன்னறுவையில் வாக்குச் சாவடிக்குக் குண்டுத் தாக்குதல்

» கொழும்பில் தற்கொலைத் தாக்குதல் நடாத்தியவர்களுக்கு ஒத்தாசை வழங்கிய எண்மருக்கு விளக்கமறியல்
» அம்பாறையில் தமிழர் மகா சங்கத் தலைவர் மீது அமைச்சர் நவரட்னராஜா தாக்குதல் நடத்தியுள்ளார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum