விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 352 போ் தடுப்பு முகாம்களில்?
Page 1 of 1

விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 352 போ் இராணுவத்தின் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் திணைக்கள தகவல்களிலிருந்து தெரிய வருகின்றது.வவுனியா மற்றும் வெலிக்கந்தை பிரதேசங்களில் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்படும் நான்காயிரம் போ் வரையான விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தொடர்பான ஆய்வின் போதே குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புலி உறுப்பினர்கள் கடந்த காலங்களில் இழைத்துள்ள குற்றச்செயல்களின் பிரகாரம் அவர்கள் ஏ, பீ, சீ என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளனர்.
அதற்கென தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புலி உறுப்பினர்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் வழங்கிய தகவல்களின் பிரகாரமே வகைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பு இயங்கிய காலத்தில் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டமை, முக்கிய பிரமுகர்கள் படுகொலை, குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதப் போக்குவரத்துகளில் ஈடுபட்டோர், கடற்படை வள்ளங்கள் மற்றும் இராணுவ முகாம்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டோர், இராணுவச் சிப்பாய்களைப் படுகொலை செய்தோர், தற்கொலைப் போராளிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் பிரதேசத் தலைவர்கள் ஆகியோர் என மொத்தம் 352 போ் பிரஸ்தாப விசாரணைகளின் போது இனம் காணப்பட்டுள்ளனர்.
அவ்வாறு இனம் காணப்பட்டுள்ள முக்கிய விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் குறித்து உயரதிகாரிகளிடம் அபிப்பிராயம் கோரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 500 போ் தீவிர விசாரணையில்?
» விடுதலைப் புலிகள் இந்தியாவில் மூன்று இரகசிய முகாம்களில் பயிற்சி? - இலங்கைப் புலனாய்வுத்துறை
» விடுதலைப் புலிகளுக்கெதிரான முக்கிய விமானத்தாக்குதல்களை மேற்கொண்ட விமானியே விபத்தில் கொல்லப்பட்டுள்ளார்
» இராணு விசேட தடுப்பு முகாமில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரொருவர் திடீர் மரணம்
» விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் முல்லைத்தீவில் தொடர்ச்சியாக மீட்கப்படுகின்றன

Permissions in this forum:
You cannot reply to topics in this forum