அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சிறைச்சாலைகளில் படையினரால் தமிழ் கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு பரிசோதனை! - நீதவானிடம் கைதிகள் முறைப்பாடு

Go down

சிறைச்சாலைகளில் படையினரால் தமிழ் கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு பரிசோதனை! - நீதவானிடம் கைதிகள் முறைப்பாடு Empty சிறைச்சாலைகளில் படையினரால் தமிழ் கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு பரிசோதனை! - நீதவானிடம் கைதிகள் முறைப்பாடு

Post by devid Tue Dec 28, 2010 10:34 am

இலங்கையில் உள்ள அரசியல் கைதிகளின் பரிசோதனை நடைமுறை இன்று (27.12.2010) தொடக்கம் மிகவும் மோசமான ஒன்றாக நடைமுறையில் வந்துள்ளது. கொழும்பு விளக்க மறியற்சாலையில் உள்ள கைதிகளே முதன் முதலாக இன்று மிகவும் கொடுமையானதும் கேவலமானுதுமான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.



இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளில் பயங்கரவாத மற்றும் அவசரகால சட்ட விதிகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இலங்கையின் சட்ட விதிகளுக்கு புறம்பான வகையில் திடீர் திடீரென முப்படையினரும் சிறைச்சாலையினுள் பிரவேசித்து பரிசோதனை செய்து வருகின்றனர்.

ஆனால் இன்று தொடக்கம் இந்த பரிசோதனை நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது சிறைச்சாலையினுள் உள்ள ஒரு தனியான அறையினுள் மூன்று கைதிகள் வீதம் கொண்டு செல்லப்பட்டு பூரணமாக நிர்வாணப்படுத்தப்பட்ட பிற்பாடே அவர்கள் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக பரிசோதனைக்கு உள்ளாகிய கைதிகள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு விளக்க மறியற்சாலையில் உள்ள கைதிகளே முதன் முதலாக இன்று மிகவும் கொடுமையானதும் கேவலமானுதுமான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

குறித்த பரிசோதனையின் போது படை அதிகாரிகள் தங்களது ஒவ்வொரு உறுப்புக்களையும் தடியினால் தட்டிக் காட்டி “உங்களைப் பாதுகாக்க இப்போது யாரும் இல்லையே” என மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டியதாகவும் அத்துடன் மூன்று கைதிகளும் ஒரே இடத்தில் நிர்வாணமாக்கப்பட்டதானது தங்களுக்கு மிகவும் அவமானமாக இருந்ததாகவும் பரிசோதனைக்கு உள்ளான ஒரு மதகுரு மிகவும் மனம் கலங்கியபடி கூறினார்.

இன்று புதுக்கடை 3 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்தில் தடுப்பு காவல் கால நீடிப்புக்காக குறித்த கைதிகள் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதவானிடத்திலும் குறித்த பரிசோதனை நடவடிக்கை பற்றி கைதிகள் குறிப்பிட்டதாகவும் அப்போது செவிமடுத்த நீதவான் அவர்கள் இந்த மோசமான பரிசோதனை நடவடிக்கையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டதாக மேலும் அந்த கைதிகள் தெரிவித்தனர்.

உலகிலே எங்குமே இல்லாத இவ்வாறான மிகவும் கேவலமான இழிவான செயற்பாடுகளுக்கு முகம்கொடுக்கின்ற இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை பாதுகாக்க சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் முன்வருவார்களா

devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum