அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சிறந்த கால்பந்து வீரர் யார்?

Go down

சிறந்த கால்பந்து வீரர் யார்? Empty சிறந்த கால்பந்து வீரர் யார்?

Post by devid Wed Dec 29, 2010 10:47 am

ரொனால்டோவை விட மெஸ்சி சிறந்த கால்பந்து வீரரெனத் தெரிவிக்கப்படுகிறது. கால்பந்து அரங்கில் முன்னணி வீரர்களாக வலம் வருபவர்கள் கிறிஸ்ரியானோ ரொனால்டோ (போர்த்துக்கல்), லியோனல் மெஸ்சி (ஆர்ஜென்ரினா), உலகின் தலை சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை இருவரும் மாறி மாறி கைப்பற்றி வருகின்றனர்.
ஆனால் கால்பந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ரொனால்டோவை விட மெஸ்சிக்கு தான் வரவேற்பு அதிகம் உள்ளது. இதற்கு காரணம் மைதானத்துக்கு வெளியே ரொனால்டோவின் நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகள் தான்.

இது குறித்து பார்சிலோனா கிளப் அணி வீரரான டேனி ஆல்வ்ஸ் (பிரேசில்) கூறுகையில்,

"கிறிஸ்ரியானோ ரொனால்டோ திறமைமிக்கவர் என்பதில் மாற்றுக் கருத்தல்லை. ஆனால் இதன் அடிப்படையில் இவர் சிறந்த வீரர் என்று கூறி விட முடியாது. ஒரு சிறந்த வீரர் என்பவர் மைதானத்துக்கு வெளியிலும் சிறப்பாக நடக்க வேண்டும். ரொனால்டோவை பொறுத்த வரை சக வீரர்கள் யாரையும் மதிக்க மாட்டார். எப்போதும் திமிராகவே இருப்பார். அமைதி என்பதே அவரிடம் இல்லை. ஆனால் அதேசமயம் மெஸ்சி ஒரு பண்புள்ள மனிதர் மைதானத்தில் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இவர் சக வீரர்களிடம் நல்ல முறையில் பழகக் கூடியவர். அமைதி, மரியாதை காட்டுதல் உள்ளிட்ட நல்ல பண்புகள் அவரிடம் உள்ளன. இதனால் தான் ரொனால்டோவை விட மெஸ்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது' என்றார்.
devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

சிறந்த கால்பந்து வீரர் யார்? Empty அதிக ரன்களை குவித்த உலக சாதனை புரிந்த மாணவன்

Post by devid Wed Dec 29, 2010 10:49 am

மும்பையில் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் உருவாகியிருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், சச்சின் டெண்டுல்கரின் திறமை மீண்டும் இந்தியாவுக்குக் கிடைக்குமா என்ற நிலையில் அர்மான் ஜாபர் என்ற 14 வயதுப் பாடசாலைச் சிறுவன் பாடசாலைகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியொன்றில் ஒரு இனிங்ஸில் 498 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.
அர்மான் ஜாஃபர் இந்திய அணிக்கு விளையாடிய வாசிம் ஜாஃபரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. பந்த்ரா பாடசாலை ரிஸ்வி ஸ்பிரிங் பீல்டுக்காக விளையாடிய அர்மான் ஜாஃபர் தாதரில் உள்ள ராஜா சிவாஜி அணிக்கெதிராக இந்தத் தனிநபர் சாதனையை நிகழ்த்தினார்.

498 ஓட்டங்களை 490 பந்துகளில் அடித்து முடித்த அர்மான் ஜாஃபர் அதில் 77 பவுண்டரிகளை விளாசியுள்ளார்.

500 என்ற கனவு இலக்கை எட்டும் முன் அவர் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்துவிட்டார்.

கடந்த ஆண்டு 16 வயதினருக்குட்பட்ட பாடசாலைக் கிரிக்கெட்டில் சர்பராஸ் கான் என்ற சிறுவன் அடித்த 439 ஓட்டங்கள்தான் இதுவரை சாதனையாக இருந்து வந்தது.

பாடசாலைக் கிரிக்கெட்டில் வினோத் காம்பிளியுடன் இணைந்து 664 ஓட்டங்கள் குவித்த சச்சின் டெண்டுல்கர்தான் தனது ரோல்மொடல் என்று அர்மான் ஜாஃபர் பின்பு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum