அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழ் அரசியல் தலைமைகளினால் முற்றாக கைவிடப்பட்டுள்ள நிலையினை உணர்கின்றோம்!: அம்பாறை மாவட்ட தமிழர்கள்

Go down

தமிழ் அரசியல் தலைமைகளினால் முற்றாக கைவிடப்பட்டுள்ள நிலையினை உணர்கின்றோம்!: அம்பாறை மாவட்ட தமிழர்கள் Empty தமிழ் அரசியல் தலைமைகளினால் முற்றாக கைவிடப்பட்டுள்ள நிலையினை உணர்கின்றோம்!: அம்பாறை மாவட்ட தமிழர்கள்

Post by MayA Mon Oct 25, 2010 10:10 pm

அம்பாறை மாவட்ட தமிழர்கள் முற்றாக தமிழ் அரசியல் தலைமைகளினால் கைவிடப்பட்டுள்ள நிலையினை தாம் இன்று உணர்வதாக கல்முனை வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் ஒருவர் தமிழ்வின்னுக்கு தெரிவித்தார்.
இன்று காலை காத்தான்குடியை சேர்ந்த லாபீர் என்ற கடும்போக்குக்கொண்ட வைத்தியர் ஒருவர் 150 வருட தமிழர் வரலாற்றைக் கொண்ட கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு வந்து தமது கடமையினை பொறுப்பேற்றார்.

அம்பாறை மாவட்டத்தில் இன்று தமிழ் மக்களுக்கென இருந்த ஒரேயோரு பெயர் சொல்லக்கூடிய சொத்தாக இந்த வைத்தியசாலையே இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இது பறிபோவது தொடர்பில் இலங்கையில் இருந்த சகல தமிழ் அரசியல் தலைமைகளிடமும் முறையிட்டோம் எதுவும் நடைபெறவில்லையென தெரிவித்த அவர், எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தின் இருப்பு நிலை தொடர் பாரிய தாக்கத்தை செலுத்தும் எனவும் தெரிவித்தார்.

எமக்கு மிகப்பெரும் பலமாக இருந்த ஆயுதப்போராட்டம் இன்று இல்லாததன் வலி இன்றுதான் எமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொண்டுசென்றபோதிலும் அவர்கள் அது எமது பகுதியில்லையெனவும் கைவிரித்துவிட்டனர்.

தற்போதுள்ள தமிழ் பணிப்பாளர் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் எமக்கு இன்று அவரின் தேவை அவசியமாக தேவைப்பட்டது. விமர்சனத்துக்கு அப்பால் அவருக்கு பதில் தமிழ் பணிப்பாளர் ஒருவர் நியமித்திருந்தால் கூட இந்த பகுதி மக்கள் சந்தோசமடைந்திருப்பர் என தெரிவித்தார்.

இது தொடர்பில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் அனைவரும் பாராமுகமாக இருந்தமை தொடர்பில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.தமிழ் அரசியல் தலைமைகளினால் முற்றாக கைவிடப்பட்டுள்ள நிலையினை உணர்கின்றோம்!: அம்பாறை மாவட்ட தமிழர்கள் CIMG9076தமிழ் அரசியல் தலைமைகளினால் முற்றாக கைவிடப்பட்டுள்ள நிலையினை உணர்கின்றோம்!: அம்பாறை மாவட்ட தமிழர்கள் CIMG9077தமிழ் அரசியல் தலைமைகளினால் முற்றாக கைவிடப்பட்டுள்ள நிலையினை உணர்கின்றோம்!: அம்பாறை மாவட்ட தமிழர்கள் CIMG9079தமிழ் அரசியல் தலைமைகளினால் முற்றாக கைவிடப்பட்டுள்ள நிலையினை உணர்கின்றோம்!: அம்பாறை மாவட்ட தமிழர்கள் CIMG9080
MayA
MayA
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum