அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அனுராதபுர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: தமிழ்க் கைதிகளுக்கு உயிராபத்து?

Go down

அனுராதபுர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: தமிழ்க் கைதிகளுக்கு உயிராபத்து?  Empty அனுராதபுர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: தமிழ்க் கைதிகளுக்கு உயிராபத்து?

Post by Admin Mon Jan 24, 2011 10:47 pm

அனுராதபுரம் சிறைச்சாலையில் சற்றைக்கு முன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கேட்டுள்ளதுடன், அதன் காரணமாக அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கும் உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனுராதபுர கைதிகள் நேற்று மாலை தொடக்கம் சிறைச்சாலை நிர்வாகத்திற்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்கள்.அதனையடுத்து அப்பிரதேசமெங்கும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டார்கள்.

அவ்வாறான நிலையில் இன்று மாலை திடீரென சிறைச்சாலைப் பிரதேசத்தில் இருந்து துப்பாக்கிப் பிரயோக சப்தங்கள் கேட்டுள்ளன. அத்துடன் கல்லெறி சம்பவங்களும் நடந்துள்ளதாக அறியப்படுகின்றது.

அங்குள்ள சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் தனியாக அடைக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் அவர்கள் எந்தவொரு ஆபத்தான கட்டத்திலும் அவர்கள் ஓடித்தப்ப முடியாதளவுக்கு அவர்கள் தடுக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறான நிலையில் தற்போது மேற்கொள்ளப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தமிழ் அரசியல் கைதிகளை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக தற்போதைக்கு நான்கு போ் வரை காயமடைந்துள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான நிலையில் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு உத்தரவாதம் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையில் தமிழ் அரசியல் வாதிகளும், முக்கியஸ்தர்களும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கைதிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் சார்பில் அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு

சிறைச்சாலையின் கைதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள பகுதியில் சிவில் குண்டர்கள் தீவைத்துள்ளதுடன், துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக ஆறு போ் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போதும் சிறைச்சாலைப் பகுதியில் இருந்து பலத்த புகை மண்டலம் கிளம்பிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக தமிழ்க் கைதிகள் இலக்கு வைத்துத் தாக்கப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. இரண்டு போ் தற்போதைக்கு காயமடைந்துள்ளனர். இலங்கை நேரப்படி இன்று மாலை ஆறரை வரை காயப்பட்டவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடியாதளவுக்கு நிலைமைகள் கடும் மோசமாக இருந்ததாக அறிவிக்கப்படுகின்றது.

தற்போதைக்கு ஆறு அம்புலன்ஸ் வண்டிகள் மூலம் இருபதுக்கும் அதிகமான கைதிகள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. ஆயினும் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் வரையில் காயமுற்றிருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக அங்கிருக்கும் எமது விசேட செய்தியாளர் தெரிவிக்கின்றார்.அதற்கு மேலதிகமாக சுமார் இருபது வரையான அம்புலன்ஸ் வண்டிகள் அப்பகுதிக்கு சைரன் ஒலியெழுப்பிக் கொண்டு சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதிகள் பெரும்பாலும் தலையில் இரத்தம் வழிந்தோடும் நிலையில் காணப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

இன்று காலை அனுராதபுர நீதிவான் நீதிமன்றத்தில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தின் போது முன்னை நாள் வடமத்திய மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவைப் படுகொலை செய்த கொலையாளியின் குற்ற அறிக்கையும் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பின்பே இன்று நண்பகல் தொடக்கம் சிறைச்சாலைக்குள் கடும் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

அதன் பின் இன்று மாலை தமிழ் அரசியல் கைதிகள் இலக்கு வைத்துத் தாக்கப்பட்டுள்ளார்கள். சிறைச்சாலை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் அதற்கென வெளியிலிருந்து நன்கு பயிற்சி பெற்ற குண்டர்கள் தருவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில் அங்கிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்குப் போதுமான பாதுகாப்பு வழங்கப்படாத பட்சத்தில் இன்று இரவுக்குள் அவர்கள் அனைவரும் உயிராபத்தை எதிர்நோக்க வேண்டிய நிலையில் இருப்பதாக அவசர எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum