வெடிகுண்டு அச்சத்தில் ஸ்ரீ லங்கன் விமானப் பயணிகள் இறக்கப்பட்டு சோதனை
Page 1 of 1

வெடிகுண்டு அச்சத்தில் லண்டன் நோக்கிப் பறந்து கொண்டிருந்த ஸ்ரீ லங்கன் விமானத்தின் பயணிகள் இறக்கப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளதாக விமான சேவை அதிகாரியொருவர் மூலம் தகவல்கள் கிடைத்துள்ளன.கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மாலைதீவு ஊடாக லண்டன் நோக்கிப் பறந்து கொண்டிருந்த ஸ்ரீ லங்கன் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளியொன்று பரவியதில் பயணிகள் அனைவரும் பெரும் அச்சத்துக்குள்ளாகினர்.
அதனையடுத்து ஸ்ரீ லங்கன் விமானப் பயணிகள் அனைவரும் மாலைதீவு விமான நிலையத்தில் இறக்கப்பட்டு மாலைதீவு தேசிய படையினரால் விமானம் முழுமையாக சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
ஆயினும் சந்தேகப்படும்படியான எதுவும் கண்டுபிடிக்கப்படாததையடுத்து பயணிகள் மத்தியில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்போது கொழும்பிலிருந்து பிரிட்டனுக்குப் பயணமாகிக் கொண்டிருந்த ஒரு பயணியே வெடிகுண்டுப் புரளியைக் கிளப்பியிருப்பது கண்டறியப்பட்டது.
அதனையடுத்து அவர் மாலைதீவு தேசிய படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு சோதனைகள் காரணமாக மாலைதீவு விமான நிலையத்தில் ஒரு மணி நேரம் தாமதமான நிலையில் விமானம் மீண்டும் லண்டன் நோக்கிப் புறப்பட்டுள்ளது.

theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» வவுனியாவில் வெடிகுண்டு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது
» மன்னார் தனியார் பஸ் - அரச பஸ் இடையில் தொடர் மோதல் - பயணிகள் நடுத்தெருவில்
» மரணப் பொறியாக மாறியுள்ள ஏ 9 வீதி! ஆங்காங்கே சிவப்பு கொடிகளால் எச்சரிக்கை! - பயணிகள் விசனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum