மரணப் பொறியாக மாறியுள்ள ஏ 9 வீதி! ஆங்காங்கே சிவப்பு கொடிகளால் எச்சரிக்கை! - பயணிகள் விசனம்
Page 1 of 1

யாழ்ப்பாணத்திலிருந்து ஏ 9 வீதியூடான போக்குவரத்து அண்மைக்காலமாக மரணப் பொறியாக மாறியிருப்பதாக பயணிகளும் வாகனச் சாரதிகளும் தெரிவிக்கின்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த கனமழை காரணமாகவே இந்த வீதி சேதமடைந்துள்ளது.
நாளாந்தம் நூற்றுக்கணக்கான வாகனங்களின் பாவனையில் உள்ள இந்த வீதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே பயணம் அபாயகரமானதாக மாறியிருக்கிறது.
குறிப்பாக வருடத்தின் இறுதிப்பகுதியாகையால் நாளாந்தம் பெருந்தொகையான சுற்றுலாப் பயணிகள் தென் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் வழமைக்கு மாறாக வாகனங்களின் வருகையும் அதிகரித்துள்ளது.
பிரதான வீதியை அண்டித் தாராளமான வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன. இரண்டு வாகனங்கள் ஒரே நேரத்தில் விலத்திச் செல்ல முடியாத இந்த வீதியில் இப்படி வாகனங்களும் நிறுத்தப்படுவதால் மேலும் பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும் வீதியின் இரு மருங்குகளும் இடிந்தும் மத்திய பகுதி குழிகள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது.
இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து மிருசுவில் வரைக்குமான வீதி மிக மோசமானதாகக் காணப்படுகிறது. நீண்ட கால மாகப் புனரமைக்கப்படாமலுள்ள இந்த வீதி தொடர்ச்சியான வாகனப் போக்குவரத்தினால் முற்றாகச் சேதமடைந்திருக்கிறது.
இடையே முகமாலை தொடக்கம் பளை வரைக்குமான வீதி ஓரளவு பயணிக்கக் கூடியதாக இருந்தாலும் இந்தப் பகுதியில் வாகனங்கள் மிகையான வேகத்தில் பயணிப்பதால் மோட்டார் சைக்கிள் போன்ற சிறிய வாகனங்களில் பயணிப்போர் பாதிக்கப்படுகின்றனர்.
ஆனையிறவை அண்மித்த பகுதியும் மிக மோசமாகவே பாதிக்கப்பட்டுள்ளமையால் ஆங்காங்கே சிவப்புக் கொடிகளால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இப் பகுதியில் தற்போது மழை நீரும் அதிகமாகத் தேங்கி நிற்கிறது.
ஆங்காங்கே தற்போது செப்பனிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட அது வீதியை மேலும் மோசமாக்கும் ஒரு செயற்பாடாக மட்டுமே இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே வீதியின் புனரமைப்புத் தொடர்பாக உரிய கவனமெடுக்க வேண்டும் என்பதோடு போக்குவரத்துத் தொடர்பாகவும் உரிய கவனமெடுக்க வேண்டும் எனவும் பயணிகளும் சாரதிகளும் கேட்டுள்ளனர்

Similar topics
» யாழ். இருபாலையில் வீதி விபத்தில் வயோதிபர் மரணம்
» மன்னார் தனியார் பஸ் - அரச பஸ் இடையில் தொடர் மோதல் - பயணிகள் நடுத்தெருவில்
» ஆயுதக்குழுக்களின் பிரச்சார இயந்திரமாக தற்போது போரூட் நிறுவனம்!: மக்கள் விசனம்
» வெடிகுண்டு அச்சத்தில் ஸ்ரீ லங்கன் விமானப் பயணிகள் இறக்கப்பட்டு சோதனை
» ராஜீவ் கொலை காரணகர்த்தாவான கே.பி.யை பாதுகாப்பதே காட்டிக் கொடுப்பு - ரணில் விசனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum