அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

காதலர் தின எதிர்ப்பை கைவிட்டுவிட்டோம்: சிவசேனை இளைஞர் பிரிவு

Go down

காதலர் தின எதிர்ப்பை கைவிட்டுவிட்டோம்: சிவசேனை இளைஞர் பிரிவு Empty காதலர் தின எதிர்ப்பை கைவிட்டுவிட்டோம்: சிவசேனை இளைஞர் பிரிவு

Post by theepan Wed Feb 16, 2011 5:54 am

காதலர் தின கொண்டாட்டத்தை கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக எதிர்த்த சிவசேனை கட்சி, இந்தஆண்டு அத்தகைய எதிர்ப்பைக் கைவிட்டதாக அதன் இளைஞர் பிரிவு தலைவர் ஆதித்யா தெரிவித்தார். இவர் சிவசேனை தலைவர் பால் தாக்கரேயின் பேரனாவார்.
தேர்தலில் இளம் தலைமுறையைக் கவர்வதற்காக காதலர் தின எதிர்ப்பைக் கைவிட்டுவிட்டதாகத் தெரிகிறது. மும்பை மாநாகராட்சி தேர்தல் வருவதை முன்னிட்டு சிவசேனை அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

காதலர் தின கொண்டாட்டத்தை எதிர்ப்பதை விட தீர்க்கப்பட வேண்டிய விவகாரங்கள் பல உள்ளன. மேலும் கடந்த சில ஆண்டுகளாக காதலர் தின கொண்டாட்ட மோகமும் இளைஞர்களிடையே குறைந்து வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

சிவசேனையின் இளைஞர் பிரிவு அமைப்பாக செயல்படும் பாரதிய வித்யார்த்தி சேனையின் மாநில தலைவராக ஆதித்யா உள்ளார்.மேலை நாட்டு கலாசாரம் என்று கூறி காதலர் தினத்தைக் கடுமையாக எதிர்த்த சிவசேனை கட்சி, பிப்ரவரி 14-ம் தேதி பரிசுப் பொருள் விற்பனையகங்களைத் தாக்குவது, இளைஞர்களை மிரட்டுவது உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டது.

இதனால் இக்கட்சி இளைஞர்கள் மத்தியில் மதிப்பிழந்தது. இதைப் போக்கும் வகையில் இப்போது எதிர்ப்பைக் கைவிட்டுள்ளது சிவசேனை. ரயில்வேயில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் கட்சி ஈடுபடுவதாக அவர் மேலும் கூறினார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மும்பை நகராட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.

அதனால் இளம் வாக்காளர்களை இழந்துவிடக்கூடாது என்பதால் இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளதாக பெயர் தெரிவிக்க விரும்பாத கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை (எம்என்எஸ்) ஒருபோதும் காதலர் தினத்தை எதிர்த்ததில்லை என்று அதன் சட்டப்பேரவை உறுப்பினர் நிதின் சர்தேசாய் குறிப்பிட்டார்.

காதலர் தின கொண்டாட்டத்தின்போது எவ்வித வன்முறையும் நிகழாமல் தடுக்குமாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டதாக உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் குறிப்பிட்டார்.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» கடத்தப்பட்ட லண்டன் இளைஞர் நேற்று விடுவிக்கப்பட்டார்
» போர்க்குற்றத் தகவல்களை இரகசியமாக வெளியிட்ட 6 இணையத்தளங்களை புலனாய்வுப் பிரிவு கண்டுபிடிப்பு - திவயின
» படகுகளைத் திருடிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாண இளைஞர் தமிழ்நாட்டில் கைது
» வாக்காளர்களுக்கு இடையூறு செய்வோரை உடனடியாக கைது செய்ய உத்தரவு! முறைப்பாடுகளை மேற்கொள்ள விசேட பிரிவு
» வாக்காளர்களுக்கு இடையூறு செய்வோரை உடனடியாக கைது செய்ய உத்தரவு! முறைப்பாடுகளை மேற்கொள்ள விசேட பிரிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum