அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பொதுமக்களின் உயிர்களுடன் விளையாடிய பாதுகாப்புத் தரப்பினர்

Go down

பொதுமக்களின் உயிர்களுடன் விளையாடிய பாதுகாப்புத் தரப்பினர் Empty பொதுமக்களின் உயிர்களுடன் விளையாடிய பாதுகாப்புத் தரப்பினர்

Post by theepan Fri Feb 18, 2011 6:08 am

பொலன்னறுவையில் பாதுகாப்புத் தரப்பினரின் பணத்தாசை காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படவிருந்த மாபெரும் உயிரிழப்பொன்று அதிர்ஷ்டவசமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.கொழும்பு - மட்டக்களப்பு புகையிரதப் பாதையின் மனம்பிட்டிய பிரதேசத்தில் தண்டவாளத்தில் இரும்புக் கம்பிகளைக் கழற்றியெடுத்த சிலர் அவற்றை பழைய இரும்பு விலைக்கு விற்பதற்கு எடுத்துச் சென்ற வேளையில் பொலிசாரிடம் மாட்டிக் கொண்டுள்ளனர்.

சந்தேகத்துக்கிடமான முறையில் முச்சக்கர வண்டியோன்றில் அவர்கள் மூட்டைகளை ஏற்றிச் சென்றதைக் கண்ட பொலிசார் அதனைச் சோதனையிட்ட போதே பிரஸ்தாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவை மனம்பிட்டிய பாலத்திற்கருகில் இரயில் தண்டவாளத்திலிருந்து கழற்றப்பட்டவை என்பது தெரிய வந்தவுடன் உஷாரடைந்த பொலிசார், அது குறித்து உடனடியாக இரயில்வே திணைக்களத்துக்கு அறிவித்தனர்.

அதன் காரணமாக அப்பாதை சீரமைக்கப்படும் வரை இரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இல்லாதுவிட்டால் கொழும்பு - மட்டக்களப்பு இரவு நேர தபால் புகையிரதம் அப்பகுதியில் தண்டவாளத்திலிருந்து விலகி விபத்துக்குள்ளாகியிருக்கும் என்பதுடன், பெரும் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவுக்கும் காரணமாக இரும்புத் திருடர்கள் பாதுகாப்புப் படையினர் என்பது விசாரணைகளின் மூலம் வெளிப்பட்டிருப்பது தான் இதிலுள்ள குறிப்பிடத்தக்க விடயமாகும். பணத்தாசை கொண்டு அவர்கள் பொதுமக்களின் உயிர்களுடன் விளையாடத் துணிந்தது இதன் மூலம் அம்பலப்பட்டுள்ளது.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum