அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கிளிநொச்சியில் பொதுமக்களின் காணிகளைக் கொள்ளையடிக்கும் ராஜபக்ஷ குடும்பம்

Go down

கிளிநொச்சியில் பொதுமக்களின் காணிகளைக் கொள்ளையடிக்கும் ராஜபக்ஷ குடும்பம்  Empty கிளிநொச்சியில் பொதுமக்களின் காணிகளைக் கொள்ளையடிக்கும் ராஜபக்ஷ குடும்பம்

Post by Admin Sun Feb 27, 2011 5:43 am

கிளிநொச்சியில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை ராஜபக்ஷ குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் நண்பர்கள் கூட்டுச் சோ்ந்து கொள்ளையடிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் பிரகாரம் தற்போதைக்கு அப்பிரதேசத்தில் சுமார் 1300 ஏக்கர் காணிகள் வர்த்தக நடவடிக்கைகளுக்கென ராஜபக்ஷ குடும்பத்தினரால் சுவீகரிக்கப்பட்டுள்ளன. அதனையொத்த அளவிலான காணிகள் ராஜபக்ஷ குடும்பத்தின் நண்பர்களால் அபகரிக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் அங்குள்ள பொதுமக்களுக்கு உரித்தானதும், உறுதிப்பத்திரம் உடையதுமான காணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. காணிகளுக்கு உரியவர்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்திருந்தனர்.

அவ்வாறான நிலையில் பலவந்தமாகக் கைப்பற்றிக் கொண்டுள்ள பொதுமக்களின் காணிகளுக்குப் பதிலாக காட்டுப் பிரதேசங்களில் அவர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்க ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சியின் பெறுமதியான காணிகள் மற்றும் எதிர்காலத்தில் வர்த்த நோக்கில் பெறுமதியை எட்டவுள்ள காணிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவே ஆளுங்கட்சிக்கு வழிகாட்டியாக செயற்படுவதாகவும், காணிகளை இழந்த மக்களுக்கு ஒட்டுசுட்டானில் மாற்றுக் காணி வழங்க ஏற்பாடு செய்யுமாறு ஆலோசனை வழங்கியதும் அவர் தான் என்பதாகவும் நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» மஹிந்த ராஜபக்ஷ யாழ் விஜயம்! வீதிகள் புனரமைக்கப்படுகிறது
» பொதுமக்களின் உயிர்களுடன் விளையாடிய பாதுகாப்புத் தரப்பினர்
» வடமாகாணத்தில் பொதுமக்களின் 1200 காணிகள் படையினர் வசம்
» கிளிநொச்சியில் 28 பாடசாலை மாணவர்கள் கடத்தல்: தப்பி வந்தவர்கள் மூலம் சம்பவம் வெளியில் கசிந்தது
» அரசாங்கத்துக்குள்ளேயே எதிர்ப்புக்குழுக்கள், அதிருப்தியாளர்கள் இருக்கின்றனர்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum