மனைவியைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரின் கணவனைத் தேடி பொலிஸ் வலை வீச்சு
Page 1 of 1

மனைவியைத் தாக்கிக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரின் கணவனை பொலிசார் வலை வீசித் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல சிங்கள நடிகையுமான பபா என்றழைக்கப்படும் உபேக்ஷா சுவர்ணமாலி நேற்று முன்தினம் அவரது கணவனால் தாக்கப்பட்டு முகத்தில் கீறல்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது முகம் மற்றும் நெஞ்சுப் பகுதியில் சில காயங்களுக்காக சத்திர சிகிச்சைக்குள்ளாகவும் நோ்ந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது. தொடர்ந்தும் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று மாலை மருத்துவமனையிலிருந்து வெளியேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த காதலர் தினத்தன்று சிங்கள சினிமாவின் இளம் நடிகர் ஒருவரைக் கட்டியணைத்து அவர் பகிரங்கமாக நடனமாடியதன் காரணமாகவே அவரது கணவரால் தாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதற்கிடையே தன்னைத் தாக்கிய கணவன் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர் மிரிஹானை பொலிசில் செய்துள்ள முறைப்பாட்டுக்கு இசைவாக அவரது கணவரான மகேஷ் சமிந்த வளவேகமவைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
ஆயினும் அவரைக் கைது செய்ய வேண்டாம் என்று ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவிடமிருந்து பொலிசாருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக பொலிஸ் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உபேக்ஷா சுவர்ணமாலியின் கணவனின் கைது விடயத்தில் பொலிசாருக்கு அரசாங்க உயர்மட்ட அழுத்தம் தொடர்ச்சியாக பிரயோகிக்கப்படும் பட்சத்தில், அவர் மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவும் முடிவில் இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரின் திருமண வாழ்க்கை முறிகின்றது
» கணவனிடம் அடிவாங்கிய ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவமனையில்
» இலஞ்சம் பெறும் பொலிஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: மட்டு.பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்
» பொலிஸ் மா அதிபரின் மனைவியின் பாதுகாவல் வாகனம் மோதி ஒருவர் பலி
» படகுகளைத் திருடிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாண இளைஞர் தமிழ்நாட்டில் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum