அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரின் திருமண வாழ்க்கை முறிகின்றது

Go down

ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரின் திருமண வாழ்க்கை முறிகின்றது  Empty ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரின் திருமண வாழ்க்கை முறிகின்றது

Post by kaavalan Sun Feb 27, 2011 4:36 am

அண்மையில் தன் கணவனின் தாக்குதலுக்கிலக்கான ஆளுங்கட்சியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் மணவாழ்க்கையை முறித்துக் கொள்ளத் தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆளுங்கட்சியில் இணைந்து ஜனாதிபதிக்கு நெருக்கமாகும் பெண்கள் அனைவரும் தமது திருமண வாழ்வில் பிளவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் பின்னணியில் இவரது திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வரவுள்ளது.

ஆளுங்கட்சியின் பெண் பாராளுமன்ற உறுப்பினரான பபா என்றழைக்கப்படும் பிரபல சிங்கள நடிகையான உபேக்ஷா சுவர்ணமாலியே தற்போது தன் கணவனை விட்டுப் பிரியத் தீர்மானித்துள்ளார்.

ஏற்கெனவே ஆளுங்கட்சிக்குள் இணைந்து கொண்டவுடன் இன்னொரு நடிகையான அனார்கலி தன் காதலனை விட்டுப் பிரிந்து, பெரும் பரபரப்பான சம்பவங்களை எதிர்கொண்டிருந்தார்.

ஆளுங்கட்சியின் முன்னணி அமைச்சர்களில் ஒருவரான பவித்ரா பிரியங்கனி ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானவர். அவரது மணவாழ்க்கை கூட ஊசலாடத் தொடங்கியவுடன் அவரது கணவருக்கும் மாகாண சபை உறுப்பினர் வரம் அளிக்கப்பட்டு, அப்பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டது.

அதன் பின் இன்னொரு சிங்கள நடிகைக்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ காரொன்றைப் பரிசளித்தது தொடக்கம் அவரது வாழ்வில் புயல் வீசத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகின்றது.

அவற்றுக்கு மேலாக ஜனாதிபதியின் திருமணத்துக்கு முந்திய நெருக்கமான தோழியான மாலினி பொன்சேகாவுக்குத் தேசியப் பட்டியல் மூலமாகப் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பரிசளிக்கப்பட்டது.

அவ்வாறான நிலையில் அண்மையில் ஜனாதிபதியுடன் அமெரிக்கா சென்று வந்த பின் உபேக்ஷா சுவர்ணமாலியின் மணவாழ்க்கையில் வீசிய தொடர்ச்சியான புயல், தற்போது விவாகரத்தில் முடியும் நிலையில் இருக்கின்றது.

அவருக்கும் கணவருக்கும் ஏற்பட்ட மோதலில் காயமுற்ற அவர் கண்களின் கீழ் தாடை முறிந்து சத்திரசிகிச்சையொன்றையும் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» மனைவியைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரின் கணவனைத் தேடி பொலிஸ் வலை வீச்சு
» கணவனிடம் அடிவாங்கிய ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவமனையில்
» வாழ்க்கை வரலாற்று புத்தகத்திற்காக ரூ.7 கோடிக்கு அசாஞ்ச் ஒப்பந்தம்
» ஐ.நா. அறிக்கையை ஆதரித்தால் “புலி” எதிர்த்தால் “சிங்கமா”?– பா.அரியநேத்திரன் பாராளுமன்ற உறுப்பினர்
» பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீதான புகார் விசாரணை ஆரம்பம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum