இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் புதிது புதிதாக வெளியாகும் ஆதாரங்கள்
Page 1 of 1

புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து ஒன்றரை வருடங்களாகி விட்டன. ஆனாலும் இறுதிப்போரின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் ஓய்ந்து விடவில்லை. நாளுக்கு நாள் இத்தகைய கோரிக்கைகள் வலுவடைந்து வருகின்றன.
அதுமட்டுமன்றி அவ்வப்போது புதிது புதிதாக வெளியாகும் நிழற்படங்களும், ஒளிப்பதிவுக் காட்சிகளும் அரசாங்கத்துக்குப் பெரும் நெருடிக்கடியைக் கொடுப்பதாக அமைந்துள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டன் சென்றிருந்தபோது சனல்4 தொலைக்காட்சி சுமார் 5 நிமிட ஒளிப்பதிவுக் காட்சி ஒன்றை கடந்த வாரம் ஒளிபரப்பியது.
அதில் நிர்வாணமான நிலையில் ஆண்களும், பெண்களும் சீருடையினரால் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் தலையின் பின்புறமாக அவர்கள் துப்பாக்கியால் கொடூரமாகச் சுடப்படுகின்றனர்.
ஏற்கனவே வெளியான ஒளிப்பதிவுக் காட்சி ஒன்றின் தொடர்ச்சியாகவே இது கருதப்படுகிறது.
இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் ஒருவர் இசைப்பிரியா என்ற புலிகளின் ஊடகவியலாளர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏனையோர் அடையாளம் காணப்படவில்லை. ஆனாலும் அவர்களில் ஒருவர் புலிகள் தளபதிகளில் ஒருவரான கேணல் ரமேஸ் என்று கூறப்படுகிறது.
இந்த ஒளிப்பதிவுக் காட்சி ஒளிபரப்பானவுடனேயே அரசாங்கம் அதை முற்றாக மறுத்தது.
ஏற்கனவே இதுபற்றி விசாரணை நடத்தி இது போலியாகத் தயாரிக்கப்பட்டது என்று நிரூபித்துள்ளதாகவும் மீண்டும் மீண்டும் அதை ஒளிபரப்பி நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த சிலர் முனைவதாகவும் அரசாங்கம் கூறியது.
இந்த ஒளிப்பதிவுக் காட்சி போலியானது என்று அரசாங்கம் கூறியிருந்தாலும் ஏற்கனவே இதை ஆய்வு செய்த அமெரிக்க நிபுணர்கள் உண்மையானதே என்று கூறியிருந்தனர்.
ஒளிப்பதிவுக் காட்சி உண்மையோ பொய்யோ இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் உண்மை.
சர்வதேச மனிதஉரிமை அமைப்புகள், ஐ.நா ஆகியனவற்றிடம் இருந்து இதுபற்றிய கவலைகளும் கண்டனங்களும் வெளியாகியுள்ளன.
இந்த ஒளிப்பதிவுக் காட்சி தாம் ஐ.நா பொதுச்செயலர் நியமித்துள்ள சிறிலங்கா தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவுக்கு அனுப்பியுள்ளதாக சனல்4 தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
இதற்கிடையே மற்றொரு ஒளிப்பதிவுக் காட்சியும் கடந்த வாரம் வெளியாகியுள்ளது. அது ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தைக் கொண்டது.
புலிகளின் மட்டக்களப்பு தளபதியாக இருந்த கேணல் ரமேஸ் விசாரணை செய்யப்படும் காட்சி இதில் பதிவாகியுள்ளது.
சிங்களத்தில் அவரிடம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதற்குப் பதிலளிக்க முடியாமல் அவர் திணறுகிறார். அச்சம் அவரது முகத்தில் தெளிவாகவே தெரிகிறது.
கேணல் ரமேஸ் கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி அதிகாலையில் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், புலித்தேவன் ஆகியோருடன் சண்டையில் கொல்லப்பட்டிருந்ததாக அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் அவர்கள் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த போதே சுட்டுக்கொல்லப்பட்டதாக புலிகள் தரப்பில் கூறப்பட்டது.
இதுதொடர்பான சர்ச்சையின் விளைவாக உயர்நீதிமன்றத்தில் கூட வழக்கு ஒன்று நடைபெற்று வருகிறது. ஆனால் சண்டையில் மரணமானதாக் கூறப்பட்ட கேணல் ரமேஸ் ஓலைக்குடிசை ஒன்றுக்குள் வைத்து விசாரிக்கப்படும் காட்சி வெளியாகியுள்ளது.

MayA- உறுப்பினர்
Similar topics
» இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் - அமெரிக்க சட்டவாதிகள் கோரிக்கை
» கொழும்பு கூட்டுத்தாபன பிரிவை நிர்வகிக்க புதிதாக ஆளுனர்?
» ஜ.தே. கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை: விஜித ஹேரத்
» ஜெனீவா மனித உரிமைக்கவுன்சிலில் தமிழரொருவருக்கு உரையாற்றும் வாய்ப்பு: இலங்கைக்கெதிரான ஆதாரங்கள் முன் வைக்கப்படும்
» இலங்கையின் மீன்பிடித்துறையில் நோர்வேயின் ஆர்வம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum