அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தோல்வியை தவிர்க்க திண்டாடும் அவுஸ்திரேலியா

Go down

தோல்வியை தவிர்க்க திண்டாடும் அவுஸ்திரேலியா Empty தோல்வியை தவிர்க்க திண்டாடும் அவுஸ்திரேலியா

Post by MayA Tue Dec 07, 2010 5:47 am

அடிலெய்ட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வெற்றியை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. 4 ஆம் நாளான இன்று அவுஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்துள்ளது.
மைக்கேல் கிளார்க் அதி அற்புதமாக விளையாடி வந்தார். ஆனால் கடைசியில் கெவின் பீட்டர்சன் வீசிய ஓவரில் அவர் 80 ரன்களுக்கு ஆட்டமிழந்ததன் மூலம் அவுஸ்திரேலியா நாளை 5ஆம் நாள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மைக் ஹஸ்சி 44 ரன்களுடன் விளையாடி வருகிறார்.

இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க அவுஸ்திரேலியாவுக்கு இன்னமும் 137 ரன்கள் உள்ளது.

கிளார்க்கும், ஹஸ்சியும் சிறப்பாக விளையாடி 4-வது விக்கெட்டுக்காக 104 ரன்கள் சேர்த்தனர்.

நாளை மழை இடையூறு இல்லாதிருந்தால் இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்புள்ளது.

கிரேம் ஸ்வான் பந்துகளை எதிர்கொள்வதில் ஹஸ்சியைத் தவிர மற்ற வீரர்கள் அதிக சிரமம் கொள்கின்றனர்.

ஸ்வான் கேடிச், பாண்டிங்கை அடுத்தடுத்து வீழ்த்தி இங்கிலாந்துக்கு வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்தார்.
MayA
MayA
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum