அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வங்காளதேசத்தை பழி தீர்த்த இந்தியா : சேவாக்கின் அதிரடியால் அதிர்ந்த மைதானம்

Go down

வங்காளதேசத்தை பழி தீர்த்த இந்தியா : சேவாக்கின் அதிரடியால் அதிர்ந்த மைதானம் Empty வங்காளதேசத்தை பழி தீர்த்த இந்தியா : சேவாக்கின் அதிரடியால் அதிர்ந்த மைதானம்

Post by Admin Sun Feb 20, 2011 4:15 am

இந்தியா- வங்காளதேசம் மோதும் முதல் போட்டி இன்று மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நடந்தது. பூவா தலையா வென்ற வங்காளதேசம் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இந்திய அணியில் சச்சின் தெண்டுல்கர், சேவாக், கம்பீர், வீரட் கோக்லி, யுவ்ராஜ் சிங், தோனி, யூசுப் பதான், ஹர்பஜன் சிங், ஸ்ரீசந்த், ஜாகீர்கான், முனாப் பட்டேல் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

ரெய்னா சேர்க்கப்படவில்லை. 3 வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். தொடக்க ஆட்டக்காரர்களாக சேவாக்கும், டெண்டுல்கரும் களம் இறங்கினர். முதல் ஓவரை சேவாக் சந்தித்தார். முதல் பந்திலே பவுண்டரியுடன் ரன் கணக்கைத் துவக்கினார். சேவாக்கும் டெண்டுல்கரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

இந்தியா 8.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்னை தொட்டது. சிறப்பாக விளையாடிய சச்சின் 28 ரன்னில் ரன் அவுட் ஆனார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 69 ரன்னாக இருந்தது. அடுத்து சேவாக்குடன் கம்பீர் ஜோடி சேர்ந்தார். சேவாக் சிறப்பாக விளையாடி 45 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியா 14.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. கம்பீர் 33 ரன் எடுத்திருக்கும் போது ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 23.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 152 ரன் எடுத்திருந்தது.

அடுத்து 3-வது விக்கெட் ஜோடியாக சேவாக்குடன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் வங்காளதேச பந்துவீச்சை விளாசிதள்ளினர். சேவாக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 94 பந்தில் 9 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் சதம் அடித்தார். அப்போது இந்தியா 31.2 ஓவரில் 200 ரன்னை தொட்டது. சிறப்பாக விளையாடி வந்த சேவாக் 175 ரன் குவித்து ஆட்டமிழந்ததார். அடுத்து யூசுப் பதான் களம் இறங்கினார். வீராட் கோலியும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். கடைசி பந்தில் யூசுப்பதான் ஆட்டமிழந்தார்.

இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 370 ரன் குவித்தது. வீராட் கோலி 100 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பின்னர் 371 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வங்காளதேசம் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம், கெய்ஸ் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை ஸ்ரீசந்த் வீசினார்.

முதல் ஓவரில் 8 ரன் எடுக்கப்பட்டது. இண்டாவது ஓவரை ஜாகீர்கான் வீசினார். இதில் 5 ரன் எடுக்கப்பட்டது. ஸ்ரீசந்த் வீசிய 5 ஓவரில் வங்காளதேசம் 24 ரன் சேர்த்தது. 4.5 ஓவரில் 50 ரன்னை தொட்டது. அணியின் ஸ்கோர் 6.5 ஓவரில் 56 ரன்னாக இருக்கும்போது 34 ரன் எடுத்த கெய்ஸ் அவுட் ஆனார்.

அவரைத் தொடர்ந்து 2 விக்கெட் ஜோடியாக தமிம் உடன் ஜுனைத் சித்திக்கு சேர்ந்தார்.

இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். ஜீனைத் சித்திக் 37 ரன்கள் (52 பந்தில் 1 பவுண்டரி 1 சிக்சர்) எடுத்திருந்த நிலையில் ஹர்பஜன் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களம் இறங்கிய ஷாகிப், தம்மிம் இக்பாலுடன் சேர்ந்து சிறப்பாக விளையாடினார். தம்மிம் 70 ரன்கள் எடுத்திருந்த போது பட்டேல் பந்தில் யுவராஜ் சிங்கால் ஆபாரமாக கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டம் இழந்தார். 3 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை 32.1 ஒவரில் எடுத்தது.

பின்னர் வந்த வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்தமையினால் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்தியா அணி 87 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.175 ரன் அடித்த வீரேந்திர சேவாக் போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
வங்காளதேசத்தை பழி தீர்த்த இந்தியா : சேவாக்கின் அதிரடியால் அதிர்ந்த மைதானம் Worldcup_india1
வங்காளதேசத்தை பழி தீர்த்த இந்தியா : சேவாக்கின் அதிரடியால் அதிர்ந்த மைதானம் Worldcup_india2
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» ரன் மழையால் நனைந்த மைதானம் : இந்திய - இங்கிலாந்து பரபரப்பு போட்டி சமநிலையில் முடிவு
» உலக கிண்ணம் : இந்தியா - இங்கிலாந்து இன்று பலபரீட்சை
» இரத்மலானை விமானப்படைத்தள விஸ்தரிப்புக்கு இந்தியா உதவி
» இந்தியா சொதப்பல் ஆட்டம்! : தென் ஆப்ரிக்கா அபார பந்துவீச்சு
» இலங்கையை பிளவுபடுத்தும் மறைமுக முயற்சியில் இந்தியா! - பாகிஸ்தான் த நேசன் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum