அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ரன் மழையால் நனைந்த மைதானம் : இந்திய - இங்கிலாந்து பரபரப்பு போட்டி சமநிலையில் முடிவு

Go down

ரன் மழையால் நனைந்த மைதானம் : இந்திய - இங்கிலாந்து பரபரப்பு போட்டி சமநிலையில் முடிவு  Empty ரன் மழையால் நனைந்த மைதானம் : இந்திய - இங்கிலாந்து பரபரப்பு போட்டி சமநிலையில் முடிவு

Post by kaavalan Mon Feb 28, 2011 5:33 am

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த இன்றைய பரபரப்பான ஆட்டம் எந்த அணிக்கு வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது
உலகக்கோப்பை போட்டித் தொடரின் பி குரூப்பில் பெங்களூருவிலுள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையில் ஆட்டம் நடந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, டெண்டுல்கரின் அபாரமான சதத்தின் துணையுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 49.5 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 338 ரன்கள் எடுத்தது.

வெற்றிபெற 50 ஓவர்களில் 339 ரன்கள் என்ற சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, துவக்கத்திலிருந்து அபாரமாக ஆடியது. அந்த அணியின் ஸ்ட்ரஸ் அபாரமாக ஆடி 145 பந்துகளில் 158 ரன்கள் எடுத்தார்.

ஒரு கட்டத்தில் 42.1 ஓவரில் இரண்டு விக்கட்டுகள் மட்டுமே இழந்து இங்கிலாந்து அணி 281 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் கைவசம் 8 விக்கட்டுகள் இருக்க, எளிதில் வெற்றி பெறும் எனக்கருதியிருந்த நிலையில் ஜாகிர் கான் அடுத்தடுத்த ஓவர்களில் மூன்று விக்கட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் இந்தியாவிற்குச் சிறிது நம்பிக்கையைக் கொண்டு வந்தார்.

இறுதி இரு ஓவர்களில் ஒவ்வொரு பந்திலும் பார்வையாளர்களுக்கு த்ரிலிங்கை ஏற்படுத்திய ஆட்டம், இறுதியில் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி முடிந்தது. 8 விக்கட்டுகளை இழந்து 50 ஓவர்களில் 338 ரன்களை இங்கிலாந்து எடுத்தது.

இதன் மூலம், இரு அணிகளும் இந்த ஆட்டத்தில் தலா ஒரு புள்ளிகளைப் பெற்றன. இன்றைய ஆட்டம் பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி இரு அணியினருக்கும் மிகுந்த உற்சாகத்தையும் த்ரிலிங்கையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் ஆன்ரூ ஸ்ட்ரஸ் தெரிவு செய்யப்பட்டார்.

ரன் மழையால் நனைந்த மைதானம் : இந்திய - இங்கிலாந்து பரபரப்பு போட்டி சமநிலையில் முடிவு  Sachin004ரன் மழையால் நனைந்த மைதானம் : இந்திய - இங்கிலாந்து பரபரப்பு போட்டி சமநிலையில் முடிவு  Andrew_strauss001ரன் மழையால் நனைந்த மைதானம் : இந்திய - இங்கிலாந்து பரபரப்பு போட்டி சமநிலையில் முடிவு  Bell_strauss001ரன் மழையால் நனைந்த மைதானம் : இந்திய - இங்கிலாந்து பரபரப்பு போட்டி சமநிலையில் முடிவு  England_india001
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum