அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

டக்ளஸ் அமைச்சராக இருக்கலாம்! மாநகரசபை விடயங்களில் தலையிடக்கூடாது - த.கூட்டமைப்பு உறுப்பினர்கள் காட்டம்

Go down

டக்ளஸ் அமைச்சராக இருக்கலாம்! மாநகரசபை விடயங்களில் தலையிடக்கூடாது - த.கூட்டமைப்பு உறுப்பினர்கள் காட்டம்  Empty டக்ளஸ் அமைச்சராக இருக்கலாம்! மாநகரசபை விடயங்களில் தலையிடக்கூடாது - த.கூட்டமைப்பு உறுப்பினர்கள் காட்டம்

Post by kaavalan Fri Feb 25, 2011 2:05 am

தமிழர்களைக் காட்டிக்கொடுத்து வரலாற்றில் மன்னிக்க முடியாத துரேகிகளாகிவிட்ட நீங்களெல்லாம் தமிழ் மக்களைப் பற்றியும் தமிழ் மக்களின் நலன்கள் பற்றியும் பேசத் தகுதியற்றவர்கள், யாழ்.மாநகரசபையின் விடயங்களில் அமைச்சர் டக்ளஸ் தலையிட்டால் அதற்கெதிராக நாம் உரிய இடங்களில் பேசுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று நடைபெற்றபோது, என்றுமில்லாத வகையில் ஈ.பி.டி.பியினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினற்குமிடையில் காரசாரமான விவாதங்கள் நடந்தன. இதன்போதே கூட்டமைப்பு மேற்கண்டவாறு ஈ.பி.டி.பியினரை எச்சரித்துள்ளது.

நேற்றைய கூட்டத்தில் யாழ்.மாநகரசபையின் செயற்பாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொள்வது தொடர்பில் கூட்டமைப்பு தனது அதிருப்தியை வெளியிட்டது.

இதற்கு பதிலளித்த மாநகர முதல்வர் அமைச்சர் டக்ளஸ் அவர் வருவார், அவர் வருவது தொடர்பில் கதைப்பதற்கு யாருக்கும் அருகதையில்லை என பதிலளித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த கூட்டமைப்பினர் அமைச்சராக அவர் இருக்கலாம் ஆனால் சட்டப்படி மாநகரசபையின் விடயங்களில் அவர் தலையிடக்கூடாது. அதற்கு உரிமையும் இல்லை என் வாதிட்டனர். இதற்கிடையில் சபையில் ஈ.பி.டி.பியினர் எங்கள் தலைவரை பற்றிப் பேச வேண்டாம் என பெரும் கூச்சலிட்டனர்.

இதேவேளை யாழ்.மாநகரசபையில் தீர்மானங்களை எடுப்பது முதல்வரல்ல அமைச்சர் டக்ளஸ்தான்! எனச்சாடியுள்ள கூட்டமைப்பினர் மாநகர முதல்வர் வீதித் திருத்தத்திற்குக் கூட அமைச்சரின் அனுமதிக்கு காத்திப்பதாக கேலிசெய்துள்ளனர்.

மேலும் இந்திய அரசாங்கம் வழங்கிய பேருந்துகள் முலம் பெரும் நஷ்டமே ஏற்பட்டுள்ளதாக இன்றைய சபையில் வாசிக்கப்பட்டது. எனினும் அது பிழையெனவும் பெரும் இலாபத்திலேயே செல்வதாக முதல்வர் மறுத்துக் கூறியுள்ளார்.
டக்ளஸ் அமைச்சராக இருக்கலாம்! மாநகரசபை விடயங்களில் தலையிடக்கூடாது - த.கூட்டமைப்பு உறுப்பினர்கள் காட்டம்  IMG_7166
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 500 போ் தீவிர விசாரணையில்?
» அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈழத்தமிழருக்குச் செய்த வரலாற்றுத் துரோகங்கள்!
»  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி: சென்னை உயர்நீதிமன்றில் தெரிவிப்பு
» விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 352 போ் தடுப்பு முகாம்களில்?
» புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 300 பேர் இன்று விடுதலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum