தடுப்புக் காவலிலுள்ளோரின் விபரங்களைப் பார்வையிடச் சென்ற பெற்றோருக்கு ஏமாற்றம்
Page 1 of 1

இராணுவத்தின் தடுப்புக் காவலிலுள்ள முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் விபரங்களைப் பார்வையிடச் சென்ற பெற்றோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல நோ்ந்துள்ளது.
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களாக இருந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் பற்றிய விபரங்களை வவுனியாவில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் பார்வையிட முடியும் என்று அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
அதனை நம்பி ஏராளமான பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று அங்கு சென்றிருந்த போதும், பலத்த ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்ல நோ்ந்துள்ளது. அவ்வாறான பட்டியல் பற்றி அங்குள்ள அதிகாரிகள் அறிந்திருக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
தற்போதைக்கு சுமார் ஐயாயிரம் போ் வரையான முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆயினும் அவர்கள் பற்றிய முழுமையான விபரத்தை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை.
இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் மற்றும் அவர்களின் விபரங்களை வெளியிடல் விடயங்கள் தொடர்பாக அடுத்து நடைபெறவுள்ள கலந்துரையாடலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேகநபர்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கை
» கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியதில் 25 போ் காயம்
» ஜனாதிபதி தனியாக வீதியில் சென்ற போது 3000 பாதுகாப்பு உத்தியோத்தகர்கள் கடமையில்...
» முயல் பொறியை எடுக்கச் சென்ற முன்னாள் போராளியை காணவில்லை என மனைவி முறைப்பாடு
» வேட்பு மனுத்தாக்கல் செய்யச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முகவர் தீவகப் பகுதியில் கடத்தப்பட்டுள்ளார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum