வேட்பு மனுத்தாக்கல் செய்யச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முகவர் தீவகப் பகுதியில் கடத்தப்பட்டுள்ளார்
Page 1 of 1

யாழ்ப்பாணம் நெடுந்தீவுப் பகுதியில் உள்ளூராட்சித் தோ்தல்களுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்யச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முகவர் கடத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி முறைப்பாடு செய்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் ஈ.பீ.டீ.பி. கட்சியின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் நெடுந்தீவுப் பகுதியிலேயே தமது முகவர் கடத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி தோ்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளது.
தமது முகவரின் கடத்தல் தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்வதால் பலன் கிட்டப் போவதில்லை என்பதன் காரணமாகவே தோ்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அது மாத்திரமன்றி கட்சி நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவுப் பிரதேசத்துக்குச் செல்லவிருந்த தமது கட்சியின் இன்னும் பல ஆதரவாளர்கள் ஈ.பீ.டீ.பி. கட்சியினரால் மிரட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டுகின்றார்.
ஆயினும் இக்குற்றச்சாட்டுகளை ஈ.பீ.டீ.பி.யின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மறுத்துள்ளார். தமது கட்சி தற்போது பிரஸ்தாப நெடுந்தீவுப் பகுதியை நிர்வாகம் செய்வதில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், உள்ளூராட்சித் தோ்தலை மையமாக வைத்து தம் கட்சி மீது அபாண்டம் சுமத்தும் நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» 20 வருடங்களுக்கு மேலாக தீவகப் பகுதியில் பூட்டப்பட்டிருந்த இரண்டு பாதைகள் திறந்துவைப்பு
» மட்டக்களப்பின் வெள்ள நிவாரண மீளாய்வுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு இல்லை
» கிழக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் கோரிக்கை
» கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியதில் 25 போ் காயம்
» தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கருத்துக்களால் அதிருப்தியுற்று கலந்துரையாடல் குழுவிலிருந்து அமைச்சர் ரத்தினசிறி விலகல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum