அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

முதல் வெற்றியைப் பெறும் நோக்குடன் களமிறங்கும் வெஸ்ட் இண்டீஸ்

Go down

முதல் வெற்றியைப் பெறும் நோக்குடன் களமிறங்கும் வெஸ்ட் இண்டீஸ் Empty முதல் வெற்றியைப் பெறும் நோக்குடன் களமிறங்கும் வெஸ்ட் இண்டீஸ்

Post by prasath Tue Mar 01, 2011 12:26 am

முதல் வெற்றியைப் பெறும் நோக்குடன் களமிறங்கும் வெஸ்ட் இண்டீஸ் Westindies_001பி பிரிவு ஆட்டத்தில் இன்று வெஸ்ட் இண்டீஸ், நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் வெற்றிக்காக போராடும்.
கெய்ல் அதிரடியில் மிரட்டி கை கொடுத்தால் மிகப்பெரிய ஸ்கோரை குவிக்கலாம். ஜூனியர் லாரா என அழைக்கப்படும் டேரன் பிராவோ நம்பிக்கை நாயகனாக உருவெடுத்துள்ளார். முதல் ஆட்டத்தில் அதிரடியாக ஆடி அசத்தினார். சர்வான், சந்தர்பால், ஸ்மித், தாமஸ் ஆகியோர் பொறுப்புடன் ஆடினால் வெற்றிக்கு முயற்சிக்கலாம்.

கேமர் ரோச், சமி ஆகியோரை நம்பி மட்டுமே வேகப்பந்து வீச்சு உள்ளது பின்னடைவாக உள்ளது. சுழலில் சுலைமான் பென், கெய்ல், டேவன் ஸ்மித் ஆறுதல் அளிக்கின்றனர். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் காலிறுதி வாய்ப்பை எளிதாக்க முடியும் என்பதால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் போராடுவார்கள்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் நெதர்லாந்து வீரர் ரேயான் டசாட்டே சதம் விளாசினார். இன்றைய ஆட்டத்திலும் அவர் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுப்பார். கெர்வெஜீ, பாரெசி, கூப்பர், கெப்டன் போரன் ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக உள்ளனர்.

பேட்டிங் பலம் உள்ள அளவிற்கு நெதர்லாந்தின் பந்து வீச்சு பலம் இல்லை. முடாசர் புகாரி, வெஸ்டிஜிக், லூட்ஸ் ஆகியோரின் பந்து வீச்சு மிரட்டும் வகையிலோ நேர்த்தியான வகையிலோ இல்லாதது அணிக்கு சரிவை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இன்றைய ஆட்டம் முக்கியமானது என்பதால் பொறுப்பை உணர்ந்து பந்துவீச்சாளர்கள் செயல்படக்கூடும்
prasath
prasath
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரதர்ஸ் பினாமியின் முதல் படம்
» தனது துணைவியருடன் இளவரசரின் முதல் பயணம்
» ஐநா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக தமிழர்களை அச்சுறுத்தி கையொப்பம் பெறும் சிறிலங்கா!
» என்னை விமர்சித்துவிட்டு எனக்கே முதல் பிரதியா?: ஆவேசம் கொண்ட மஹிந்த
» இலஞ்சம் பெறும் பொலிஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: மட்டு.பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum