இலங்கையின் முக்கியத் தினசரிப் பத்திரிகையொன்றை கே.பி. கையகப்படுத்தப் போகின்றார்?: தமிழுக்கு ஒளி தொலைக்காட்சி உரிமையாளரும் கூட்டு
Page 1 of 1

இலங்கையில் இருந்து வெளிவரும் முக்கியத் தினசரியொன்றை விடுதலைப் புலிகளின் முன்னை நாள் அனைத்துலகப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் (கே.பி.) கையகப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பிலிருந்து வெளிவரும் இலங்கைத் தமிழ்த் தினசரிகளில் முதன்முதலாக யாழ்ப்பாண பதிப்பை பிரஸ்தாப பத்திரிகை நிறுவனமே வெளியிட்டிருந்தது. அத்துடன் அப்பத்திரிகை நிறுவனத்தின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமான நண்பரும் கூட.
அதன் காரணமாக அதில் பங்காளர் என்ற போர்வையில் குமரன் பத்மநாதனையும் இணைத்துக் கொண்டு பத்திரிகையின் நிர்வாகத்தை அவர் கையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதற்கு மேலதிகமாக மிக விரைவில் அவர்களுடன் தமிழுக்கு ஒளி என்ற பெயரில் செய்மதி மூலமான தொலைக்காட்சி மற்றும் வானொலிச் சேவையை நடாத்தி வரும் பாரிஸ் தமிழர் ஒருவரும் அவர்களுடன் கூட்டுச் சோ்ந்து மிக விரைவில் தமிழ்த் தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரி்சையொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் ஊர்ஜிதமான செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பிரிவில் பணியாற்றிய பலர் தற்போது அவர்களுடன் இணைந்திருப்பதாகவும், புலம் பெயர் நாடுகளில் பிரபலமாக இருக்கும் தமிழ் இணையத்தளங்களின் முக்கியஸ்தர்கள் சிலரும் அதில் உள்ளடக்கம் என்பதாகவும் பிரஸ்தாப தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Similar topics
» சட்டவிரோத குடியேற்றங்களால் இலங்கையின் நற்பெயருக்குப் பாதிப்பு! - பிதற்றுகிறார் பீரிஸ்
» பாகிஸ்தானுடனான போட்டியில் இலங்கை தோல்விக்குக் காரணம் கிரிக்கட் சூதாட்டம்?: அரச தொலைக்காட்சி தரும் அதிரடித் தகவல்
» இலங்கையின் மீன்பிடித்துறையில் நோர்வேயின் ஆர்வம்
» இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான புகைப்படங்கள் சில….
» இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் புதிது புதிதாக வெளியாகும் ஆதாரங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum