அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மட்டக்களப்பில் நடைபெற்ற தேசிய பார்வையற்றோர் சம்மேளனத்தின் மகாநாடு

Go down

மட்டக்களப்பில் நடைபெற்ற தேசிய பார்வையற்றோர் சம்மேளனத்தின் மகாநாடு  Empty மட்டக்களப்பில் நடைபெற்ற தேசிய பார்வையற்றோர் சம்மேளனத்தின் மகாநாடு

Post by Admin Tue Mar 01, 2011 5:48 pm

தேசிய பார்வையற்றோர் சம்மேளனத்தின் மகாநாடு மட்டக்களப்பில் நடைபெற்றது. இந்த மகாநாட்டிற்கு தேசிய பார்வையற்ற சம்மேளனத்தின் தலைவர் குணவர்த்தன அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்த மகாநாட்டிற்று பிரதம அதிதிகளாக மட். மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா பா.அரியநேத்திரன் சீ.யோகேஸ்வரன் ஆகியோரும் மற்றும் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் மற்றும் கிழக்கு மாகாண பார்வையற்றோர் சம்மேளன தலைவர் திரு வடிவேல் மற்றும் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த விழிப்புலனற்றோர் மாவட்ட சம்மேளன நிருவாக உறுப்பினர்கள் அத்துடன் சமூகசேவை ஆர்வலர்கள் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதில் பா.அரியநேத்திரன் அவர்கள் உரையாற்றும் போது,

பார்வையற்றவர்களுக்கு சமுதாயத்திலுள்ள அனைவரும் உதவவேண்டும் எனவும் விழி இருந்தும் அனேகமானோர் குறுக்கு வழியில் செல்லுகின்ற இந்தக் காலத்தில் விழிப்புலனற்றோர்கள் பல துறைகளிலும் பல விசேட திறமைகளுடன் உள்ளனர். இது இவர்களின் விடாமுயற்சியே ஆகும்.

இவர்கள் அனைவரும் மற்றவர்களைவிட எதோ ஒரு துறையில் திறமைசாலிகள் பார்வையற்றவர்கள் என இவர்களை ஒதுக்கிவிடக்கூடாது நாம் அனைவரும் இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அடுத்ததாக பொன் செல்வராசா அவர்கள் உரையாற்றும்போது,

அங்கத்திலே ஒரு குறையிருக்கின்றதே தவிர மற்றைய அனைத்து செயற்பாடுகளிலும் இவர்கள் திறமைசாலிகளாகக் காணப்படுகின்றனர் எனவும் இந்த தேசிய சம்மேளன நிகழ்வில் தமிழர் சிங்களவர் முஸ்லிம் என மூன்று இனத்தவர்களும் ஒற்றுமையாகக் கலந்துகொண்டிருப்பதானது இவர்களின் திறந்த மனப்பாங்கைக் காட்டுகின்றதெனவும் தெரிவித்தார்.

தேசிய சம்மேளனத் தலைவர் உரையாற்றும்போது இந்த அமர்வுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் கலந்துகொண்டிருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் தேசிய மட்டத்தில் விழிப்புலனற்றவர்களுக்காக தாங்கள் மேற்கொண்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களைப் பற்றியும் கிழக்கு மாகாணத்தில் இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வானது கிழக்கு மாகாண பார்வையற்றோர் சம்மேளன அலுவலகம் அமைந்துள்ள மட்டக்களப்பு மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பில் கண்ணகி வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றதென்பது குறிப்பிடத்தக்கது.மட்டக்களப்பில் நடைபெற்ற தேசிய பார்வையற்றோர் சம்மேளனத்தின் மகாநாடு  Batti1311_01மட்டக்களப்பில் நடைபெற்ற தேசிய பார்வையற்றோர் சம்மேளனத்தின் மகாநாடு  Batti1311_2மட்டக்களப்பில் நடைபெற்ற தேசிய பார்வையற்றோர் சம்மேளனத்தின் மகாநாடு  Batti1311_3மட்டக்களப்பில் நடைபெற்ற தேசிய பார்வையற்றோர் சம்மேளனத்தின் மகாநாடு  Batti1311_4மட்டக்களப்பில் நடைபெற்ற தேசிய பார்வையற்றோர் சம்மேளனத்தின் மகாநாடு  Batti1311_5மட்டக்களப்பில் நடைபெற்ற தேசிய பார்வையற்றோர் சம்மேளனத்தின் மகாநாடு  Batti1311_6மட்டக்களப்பில் நடைபெற்ற தேசிய பார்வையற்றோர் சம்மேளனத்தின் மகாநாடு  Batti1311_7மட்டக்களப்பில் நடைபெற்ற தேசிய பார்வையற்றோர் சம்மேளனத்தின் மகாநாடு  Batti1311_8


மட்டக்களப்பில் நடைபெற்ற தேசிய பார்வையற்றோர் சம்மேளனத்தின் மகாநாடு  Coolte10
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum