அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஆயுதக்குழுக்களின் பிரச்சார இயந்திரமாக தற்போது போரூட் நிறுவனம்!: மக்கள் விசனம்

Go down

ஆயுதக்குழுக்களின் பிரச்சார இயந்திரமாக தற்போது போரூட் நிறுவனம்!: மக்கள் விசனம் Empty ஆயுதக்குழுக்களின் பிரச்சார இயந்திரமாக தற்போது போரூட் நிறுவனம்!: மக்கள் விசனம்

Post by VeNgAi Wed Dec 08, 2010 2:14 am

அரச சார்பற்ற நிறுவனங்களின் மிகவும் முக்கியமாக தமிழர் பகுதிகளில் கடந்த காலங்களில் பொறுப்புணர்வோடு சேவையாற்றிய நோர்வேயை மையமாக கொண்ட போரூட் நிறுவனமும் தற்போது அரச சார்பு ஆயுதக்குழுக்களுக்கு பிரச்சார இயந்திரமாக மாறியுள்ளமையால் மக்கள் கவலையடைந்துள்ளார்கள்.
இதுவரைகாலமும் வாழ்வாதார பணிகளையும், முக்கியமாக ஆழிப்பேரலை ஏற்பட்டபோதும் கணிசமான உடனடி உதவிகளையும் நிரந்தர வீடமைப்பு வேலைகளையும் ஆற்றிவந்த இந்நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஆனே.பெங்சாட் வீசா இரத்து செய்யப்பட்டு அண்மையில் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். என்பது யாவரும் அறிந்ததே.

இது இவ்வாறிருக்க அண்மையில் போரூட் நிறுவனத்தினால் வன்னி இறுதியுத்தத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் சிலருக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஈ.பி.டி.பி கட்சியின் வடமராட்சி அமைப்பாளர் கலந்து கொண்டார் என்பதோடு அவர் சும்மாவிடவில்லை இந்த உதவிகள் கிடைப்பதற்கு எமது அமைச்சரே காரணம் என்ற புராண படலத்தையும் முக்கால் மணிநேரம் ஆற்றி முடித்திருக்கின்றார். அதாவது மக்களின் தேவைகளை போரூட் நிறுவனம் அறியாதது போலவும் தமது அமைச்சர் இனங்கண்டு இவற்றை வழங்குவதுபோலவும் பேசிமுடித்திருக்கின்றார்.

அப்படியானால் போரூட் நிறுவனமோ அல்லது ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு பயனாளிகளை இனங்காணும் திறமை இல்லையா அல்லது அவர்கள் அவ்வாறான ஒரு இக்கட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளார்களா? ஏன் உதவி அரசாங்க அதிபரூடாகவோ அல்லது கிராம மட்ட அமைப்புக்களூடாகவோ பயனாளி தெரிவுசெய்ய இயலாமல் இவர்கள் ஏன் ஆயுதக்குழுக்களின் கைகளில் விழுந்துள்ளார்கள்? என்பதை அரசார்பற்ற நிறுவனங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்.

ஏன் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்ற பெயர் வழங்கப்படுகின்றது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது பொதுமக்களுக்கும் நிறுவனத்திற்கும் உள்ள விடயங்கள் இவற்றில் ஏன் ஆயுதக் குழுக்களையோ, இராணுவ அதிகாரிகளையோ இணைக்கின்றீர்கள். உதவ வேண்டுமானால் உங்களாலான உதவிகளை உரிய வழிகளில் வழங்குங்கள்.

ஆழிப்பேரலை ஏற்பட்டு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாகவிருந்த முல்லைத்தீவில் போரூட் நிறுவனத்தினால் 85 மில்லியன் ரூபா பெறுமதியான நிரந்தர வீட்டுதிட்ட கையளிப்பு நிகழ்விற்கு கூட அரச அதிபரே பொறுப்பாக இருந்து செயற்பட்டார்.

போரூட் நிறுவனம் பற்றி மக்களிடத்திலுள்ள உள்ள நல்ல அபிப்பிராயத்தை சில நிறுவன பணியாளர்கள் உதாசீனப்படுத்துகின்றார்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது.

அதற்காக அவர் இவர்களின் பிரச்சார இயந்திரமாக மாறுவதை தமிழ் மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதையும் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாமல் இருக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அன்போடு அறியத்தருகின்றோம்.ஆயுதக்குழுக்களின் பிரச்சார இயந்திரமாக தற்போது போரூட் நிறுவனம்!: மக்கள் விசனம் Forut_vadama_east
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum