பார்வதி அம்மாளுக்கு அஞ்சலிகள் செலுத்துவதர்கு சிறீலங்கா இராணுவம் அச்சுறுத்தல்
Page 1 of 1

பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
பார்வதி அம்மாளுக்கு அஞ்சலிகள் செலுத்துவதை கூட சிறீலங்கா இராணுவம் தடுத்து வருகையில், அதனையும் மீறி தமிழ் மக்கள் தமது இறுதி வணக்கத்தை தெரிவித்துவருகின்றனர்.
யாழில் பல பகுதிகளில் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. குறிப்பாக வடமராட்சி பகுதியில் பல வீடுகளிலும், பொது அமைப்புக்களின் அலுவலகங்களிலும் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
பார்வதி அம்மாவின் சிகிச்சைக்கான அனுமதிகளை மறுத்த இந்திய மற்றும் தமிழக அரசுகள் பின்னர் அரசியல் இலபாம் கருதி அவரை மீண்டும் அழைத்தபோது அதனை நிராகரித்த தேசத்தின் தாய் தனது சொந்த ஊரில் நோயுடன் போராடி இறைபாதம் அடைந்துள்ளார்.
தற்போது வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அம்மாவின் உடல் தீருவில் மைதானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
அங்கு தான் கேணல் கிட்டு, லெப். கேணல் புலேந்திரன், லெப். கேணல் குமரப்பா ஆகியோரின் நினைவு மண்டபம் கட்டப்பட்டிருந்தது. ஆனால் அது பின்னர் சிறீலங்கா இராணுவத்தினரால் அழிக்கப்பட்டுவிட்டது.
கடந்த வருடம் காலம்சென்ற தேசத்தின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் உடலும் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சிறீலங்கா இராணுவத்தால் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த மாதந்தை பனாங்கொடை இராணுவமுகாமில் இறையடி சேர்ந்திருந்தார்.

kaavalan- முக்கிய பிரமுகர்
Similar topics
» பார்வதி அம்மாளுக்கு இரங்கற் பிரேரணைக்கு யாழ். மாநகர சபை மறுப்பு
» விடுதலைப்புலிகள் இல்லாவிட்டாலும் அச்சுறுத்தல் தணியவில்லை - இலங்கை அரசாங்கம்
» ஈழத்தாய் பார்வதியம்மாவுக்கு புலம்பெயர் அமைப்புக்களின் கண்ணீர் அஞ்சலிகள்
» வல்வெட்டித்துறையில் இராணுவம் பொதுமக்களைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளது
» வன்னி மக்களின் மீளக்குடியேற்றத்திற்கு இராணுவம் அனுமதி மறுப்பு-த.தே.கூட்டமைப்பு குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum