முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு வங்கிக்கடன் வசதி செய்துகொடுக்கப்படவுள்ளது
Page 1 of 1
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு வங்கிக்கடன் வசதி செய்துகொடுக்கப்படவுள்ளது
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு வங்கிக் கடன் வசதிகள் வழங்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் நூற்றி ஆறு போ் இன்று வவுனியாவில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். பிரஸ்தாப வைபவத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களில் பாலர் பாடசாலை ஆசிரியப் பயிற்சியைப் பெற்றுக் கொண்ட 26 பேருக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் சமூகத்தில் கௌரவமாக வாழ வேண்டும்.அதற்கேதுவாக அவர்கள் அனைவருக்கும் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தாங்கள் பெற்ற தொழிற்பயிற்சியின் மூலம் போதுமான வருமானத்தைத் தேடிக் கொள்ள முடியாதவர்கள் அதனை மேம்படுத்துவதற்காக வங்கிக் கடன்பெற நாடினால் அதற்கான ஏற்பாடுகளையும் நாம் செய்து கொடுப்போம்.
அத்துடன் மாதம் தோறும் இராணுவ அதிகாரிகள் மூலம் உங்களைச் சந்தித்து உங்கள் குறைகளைக்கேட்டறியவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். நீங்கள் தெரிவிக்கும் விடயங்களுக்கு உடனுக்குடன் தீர்வு பெற்றுத்தர ஆவண செய்யப்படும்.
அத்துடன் பல்கலைக்கழக வாய்ப்பைப் பெற்றுள்ள முன்னாள் பெண் புலி உறுப்பினர்களுக்குப் புலமைப் பரிசில் திட்டமொன்றும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» இராணு விசேட தடுப்பு முகாமில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரொருவர் திடீர் மரணம்
» புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 300 பேர் இன்று விடுதலை
» புனர்வாழ்வு பெற்ற 500 முன்னாள் புலி உறுப்பினர்கள் வெசாக் பண்டிகையில் விடுதலையாவர்
» விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர் மட்டக்களப்பில் கைது
» விடுதலையான முன்னாள் புலி உறுப்பினர்களில் 98 பேர் தேர்தல்களில் போட்டியிடுவர் - புனர்வாழ்வு அமைச்சர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum