அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உழைத்தலும் உழைத்தலுக்கான போராட்டங்களுமே தமிழர் இருப்பை உறுதி செய்யும்: நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன். 2011 மே நாள் செய்தி

Go down

உழைத்தலும் உழைத்தலுக்கான போராட்டங்களுமே தமிழர் இருப்பை உறுதி செய்யும்: நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன். 2011 மே நாள் செய்தி  Empty உழைத்தலும் உழைத்தலுக்கான போராட்டங்களுமே தமிழர் இருப்பை உறுதி செய்யும்: நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன். 2011 மே நாள் செய்தி

Post by kaavalan Sun May 01, 2011 7:42 pm

உலக சமூகங்கள் ஒன்று சேர்ந்து உழைக்கும் மக்களின் உயர்வுக்காகவும் உரிமைக்காகவும் புரட்சிக்கும் இந்நாளில் எங்கள் தேசத்தின் உயர்வுக்காய் உழைத்து வரும் தொழிலாளச் சகோதரர்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
உழைத்தல் என்பது ஒர் உன்னதமான செயற்பாடு உழைத்தல் மூலம் பெறப்படுகின்ற பயன் விளைவுகள் மனித மேம்பாட்டையும் மகிழ்ச்சியையும் மாத்திரமன்றி சமூகத்தின் வலிமையையும் பிரதிபலிப்பன. உழைத்தலுக்கூடாகப் பெறப்பட்ட பெறபேறுகளே ஒவ்வொரு சமூகங்களையும் அரசுகளையும் பொருளாதார மேன்னிலை உடையதாக வளர்த்து வந்திருக்கிறது. இத்தகைய உழைப்புகளுக்கான முயற்சிகளின் போது உழைப்பாளர்கள் எதிர் கொண்ட சவால்கள் சாதாரணமானவையல்ல. தொழில்புரட்சிகள் ஊடாக ஏகாதிபத்தியங்களிடம் இருந்து தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் தொழிலாளர் நலன்களும் நலனோம்பு பட்டயங்களும் பாட்டாளிகளின் உணர்வுகளையும் உரிமைகளையும் உறுதிப்படுத்துவதாக பறை சாற்றப்படுகின்றது. ஆனால் அரசியல் ஆதிக்க எண்ணங்களும் முதலாளித்துவ சார்புநிலைகளும் பொருளாதாரத் திட்டமிடல் குறைவும் நவ பொருளாதாரச் சுரண்டல்களுமாக உலகத் தொழிலாளர் சமூகம் வேதனைகள் மத்தியிலேயே தமது சாதனைகளைப் புரிந்து வருகின்றனர்.

இவை எல்லாவற்றையும் கடந்து தாம் சார்ந்துள்ள சமூகத்தின் நிலைபேற்றிற்காகவும் அதன் பொருளாதார மேன்னிலைக்காகவும் உழைப்பதன் மூலம் தமது உரிமைகளையும் உறுதிப்படுத்தி தமது தேசங்களின் பலத்தையும் வளத்தையும் தொழிலாளவர்க்கம் வெளிப்படுத்தி வருவது மகிழ்வு கொள்ளத்தக்கதாகும்.

எங்களுடைய இலங்கைத்தீவைப் பொறுத்தவரையில் அது தன்னகத்தே கொண்டிருக்கும் மனிதவளம் என்பது அதன் முதன்மையான சொத்தாகும். பரந்துபட்ட இயற்கை வளங்களும் மனிதவளப்பயன்பாடும் இணைந்த அறிவுபூர்வமான பொருளாதாரக் கொள்கையே எமது சமூகத்தின் வலிமையான அடிப்படையாக விளங்கும். இருந்த போதிலும் துரதிஷ்டவசமாக அரசு கடைப்பிடித்து வருகின்ற இனரீதியான பாகுபாட்டு அணுகுமுறைகள் பாரபட்சமான தொழில் வாய்ப்புகள் மற்றும் சமவாய்ப்புக்களும் சமஉரிமைகளும் மறுக்கப்படுதல் என்பவை தமிழ்பேசும் தொழிலாளர்களுடைய வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தத் தவறி வருகிறது. தமிழர்களுடைய உற்பத்திகளுக்கான நிலம் கடல் வளப்பயன்பாடு, வணிகம், அறிவியல், அரசசேவை என்பனவற்றின் தொழில்துறைத் தீர்மானங்களைத் தமிழ் பேசும் தொழிலாளர்கள் எடுக்கமுடியாதநிலையே நீடித்து வருகிறது. மலையகத் தமிழ்த்தொழிலாளர்கள் நியாயமான நாட்கூலியைக்கூட பெற முடியாதுள்ளனர். குறைந்த ஊதியமும் கூடிய உழைப்பும் வாழ்க்கைத் தரத்தைக் குறைவடையச் செய்திருக்கிறது.

அரசியல் அதிகாரப்பகிர்வும் நல்லாட்சிக்கான நவீன அணுகுமுறைகளும் அரசிடம் இல்லாமையால் தமிழ் பேசும் தொழிலாளர் வர்க்கத்தின் துயரங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. இருந்த போதிலும் அவர்களின் உழைத்தலும் உழைத்தலுக்கான போராட்டங்களும் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. எத்தகைய துயர்வரினும் அவற்றை எதிர் கொண்டு உழைத்து வளம் பெறுகின்ற எமது தொழிலாளர்களின் பலம் தமிழ் நிலத்திற்குத் தெம்பூட்டுகின்றது. நம்பிக்கையளிக்கின்றது.

அலைகடல் தாண்டி வாழ்ந்த போதும் தமிழர் பொருளாதாரத்தின் தாங்கு நிலை சக்தியாக இருக்கின்ற உழைப்பாளர்கள் படையே நிலத்தில் வாழ்கின்ற எமது சகோதரத் தொழிலாளர்களின் நம்பிக்கைத் தளமாக இருக்கின்றது. எமது சமூகத்தின் இருத்தல் கேள்விக்குள்ளாக்கப்பட்டு எமது தொழிலாளர்கள் நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டபோது அவர்கள் மீண்டு எழுவதற்கும் அவர்களின் பொருளாதார முயற்சிகளுக்கும் உதவிவரும் புலம்பெயர் தமிழ்தொழிலாளர் சமூகத்திற்கும் எமது வாழ்த்துக்கள். புலம்பெயர் தொழிலாளர்களும் நிலம்வாழ் தொழிலாளர்களும் இணைந்து செயற்படும் போக்கு தமிழர்களின் பொருளாதார வலிமையையும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையையும் உணர்த்திநிற்கிறது.

எதிர்காலத்தில் எமது தொழிலாளர்கள் தமது பாரம்பரிய அடயாளங்களை நிறுவக்கூடிய சுயதீர்மானங்களின் அடிப்படையில் தொழில்களைப்புரியக்கூடிய தொழிற்சுதந்திரமும் பாதுகாப்பும், பலமும் உடைய அரசியல் சமூகம் ஒன்றில் உழைப்பால் உயர்வு பெற்ற சமூகமாக நிலைபெறுவதற்கும் தொழிலாளர்களுடைய வாழ்வு வளம் பெறவும் இன்றைய நாளில் உங்களுடன் கருத்துப்பகிர்வதில் பெருமிதம் அடைகிறோம்.

நன்றி.

கௌரவ சிவஞானம் சிறிதரன்.
நாடாளுமன்ற உறுப்பினர்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு
மாவட்டப்பணிமனை
கிளிநொச்சி
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் வாகனம் மீது இரு கைக்குண்டு மற்றும் பாரிய துப்பாக்கிச் சூடு
» சகல மக்களினதும் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் அதிகாரப் பரவலாக்கல் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்: ஆஸி.பாராளுமன்ற உறுப்பினர்
» கா.பொ.இரத்தினம் அவர்களின் மறைவு தமிழருக்கு பேரிழப்பு - சிறிதரன் பா.உ. அனுதாபம்
» சூழ்ச்சி செய்யும் கேரளாவுடன் பேச்சுவார்த்தை கூடாது:வைகோ
» மாவீரர்களின் நடுகல் வணக்க நாள் ஏப்ரல் 05 - அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப்புலிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum