பாரிஸ் புறநகர் பகுதியில் இரு தமிழ் குழுக்களுக்கிடையில் மோதல்- இளைஞர் ஒருவர் படுகொலை
Page 1 of 1
பாரிஸ் புறநகர் பகுதியில் இரு தமிழ் குழுக்களுக்கிடையில் மோதல்- இளைஞர் ஒருவர் படுகொலை
பிரான்ஸ் நாட்டில் இலங்கை தமிழர்கள் அதிகம் வாழும் பரிஸ் புறநகர்ப் பகுதியான லாகூர்நோவ் பகுதியில் திங்கட்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இரு தமிழ் குழுக்களுக்கிடையில் நடந்த சண்டையில் 26 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அவரின் கைகள் இரண்டும் துண்டாடப்பட்டு நிலத்தில் போடப்பட்டிருந்ததாக பாரிஸ் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் கடை ஒன்றிற்கு முன்னால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மதுபான கடைக்கு ஒருவர் சென்ற போது இரு கார்களில் கத்திகள் வாள்களுடன் முகத்தை கறுப்பு துணியால் கட்டியவாறு வந்த 6 பேர் அந்த இளைஞரை வாள்களால் வெட்டியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் காவல்துறையினருக்கு சாட்சியமளித்துள்ளார்.
தான் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த போது ஒருவர் தன்னைக் காப்பாற்றுமாறு அவலக்குரல் எழுப்பியதை கேட்டதாகவும் உடனடியாக யன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது வாள்கள் கத்திகளுடன் காணப்பட்ட சிலர் ஒருவரை வெட்டிக்கொண்டிருந்தனர் என சம்பவத்தை நேரில் பார்த்த மிசேல் என்பவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்கள் இரு கார்களில் தப்பி சென்றதாகவும் ஒவ்வொரு வாரஇறுதி நாட்களிலும் தமிழ்குழுக்கள் இவ்வாறு வன்முறையில் ஈடுபடுவதை தொழிலாக கொண்டிருக்கிறார்கள் என்றும் மிசேல் தெரிவித்தார்.
இது தொடர்பாக லாகூர்நோவ் நகரசபை மற்றும் காவல்துறையினருக்கு ஏற்கனவே இப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் இணைந்து மனு ஒன்றை கொடுத்திருப்பதாகவும் இப்போது தங்களுக்கிடையில் கொலைகளை புரியும் இத்தமிழ் குழுக்கள் காலப்போக்கில் பிரென்ஸ் குடிமக்கள் மீதும் தாக்குதல் நடத்துவார்கள் என அப்பிரதேசத்தில் நீண்டகாலமாக வசித்து வரும் மிசேல் தெரிவித்தார்.
இவ்வாறான வன்முறைகளை கட்டுப்படுத்த காவல்துறையினர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இரு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து யப்பானில் தயாரிக்கப்பட்ட கூரிய வாள் ஒன்றை கண்டெடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» அமெரிக்காவில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்
» கடத்தப்பட்ட லண்டன் இளைஞர் நேற்று விடுவிக்கப்பட்டார்
» பிரபல சிங்கள நடிகை படுகொலை
» சுவிட்சர்லாந்தின் மேற்குப் பகுதியில் வெள்ளம் ஏற்படக் கூடிய அபாயம்
» ஜாதிக ஹெல உறுமயவுக்கும் அரசாங்கத்துக்குமிடையிலான மோதல் வலுக்கின்றது
» கடத்தப்பட்ட லண்டன் இளைஞர் நேற்று விடுவிக்கப்பட்டார்
» பிரபல சிங்கள நடிகை படுகொலை
» சுவிட்சர்லாந்தின் மேற்குப் பகுதியில் வெள்ளம் ஏற்படக் கூடிய அபாயம்
» ஜாதிக ஹெல உறுமயவுக்கும் அரசாங்கத்துக்குமிடையிலான மோதல் வலுக்கின்றது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum