ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினர் விசேட அதிரடிப்படையினரால் நையப்புடைக்கப்பட்டுள்ளனர்
Page 1 of 1

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவைச்சோ்ந்த சிலா் கண்டியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் நடைபெற்ற சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டியின் போது சிம்பாப்வே அணிக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் கண்டி ஸ்கை வியூ ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், ஹோட்டலுக்குள் நுழையும் போது ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினர் அவர்களைப் புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
அனுமதியற்ற முறையில் தம்மை புகைப்படம் எடுத்து, வீடீயோ ஒளிப்பதிவு செய்தமை குறித்து அவர்கள் ஜனாதிபதி ஊடகப் பிரிவினருடன் வாக்குவாதப்பட்டுள்ளனர். ஆயினும் புகைப்படம் மற்றும் ஒளிப்படம் எடுப்பதற்கு தமக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவினர் திமிராக பதிலளித்துள்ளனர்.
அதனையடுத்து கோபம் கொண்ட விசேட அதிரடிப்படையினர் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு ஊழியர்களை நையப்புடைத்துள்ளனர்.
தற்போது அச்சம்பவம் குறித்து பாதுகாப்புச் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகவியலாளர்களைத்தாக்கியவர்கள் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் எதிரானவர்கள் என்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் காரணமாக தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய விசேட அதிரடிப்படையினர் உடனடியாக கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களின் குடும்ப பின்னணி குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் பொலிஸ் மா அதிபருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

Similar topics
» திஸ்ஸமஹாராமையில் ஜனாதிபதியின் பிரசார நடவடிக்கை பிசுபிசுப்பு
» ஜனாதிபதியின் மாவட்டத்தின் வீரவிலவில் அடிவாங்கிய ஆளும்கட்சி
» ஜனாதிபதியின் அனுக்கிரகத்தில் அனுருத்த ரத்வத்தைக்கு எதிரான வழக்குகளும் வாபஸ்பெறப்படவுள்ளன
» இலங்கை போர்க்குற்றங்களை விசாரிக்க விசேட நீதிமன்றம்!- ஐ.நா. உள்ளக அறிக்கை
» தங்காலையில் ஜனாதிபதியின் குண்டர்கள் முஸ்லிம் வாக்காளர்களை ஆயுத முனையில் மிரட்டல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum