ஜனாதிபதியின் அனுக்கிரகத்தில் அனுருத்த ரத்வத்தைக்கு எதிரான வழக்குகளும் வாபஸ்பெறப்படவுள்ளன
Page 1 of 1

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அனுக்கிரகம் காரணமாக முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தைக்கு எதிரான வழக்குகளும் விரைவில் வாபஸ் பெறப்படவுள்ளன.
பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் வருமானத்தை மீறிச் சொத்துச் சோ்த்த வழக்கில் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தைக்கு எதிராக ஊழல் மற்றும் மோசடி புலனாய்வுப் பிரிவினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் அவரது வங்கிப் பெட்டகத்திலிருந்து கைப்பற்றப்பட்ட நானூறு கோடி பெறுமதியான பிணைமுறிகள் குறித்தும், அவ்வளவு பெருந்தொகைப் பணத்தை உழைத்த வழிமுறைகள் குறித்தும் அந்த வழக்கில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.
பிரஸ்தாப வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட போது அனுருத்த ரத்வத்தையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சாட்சிகளை விசாரிக்காமல் வழக்கைத் தள்ளுபடி செய்ய நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதனை சட்டமா அதிபர் திணைக்கள வழக்கறிஞரும் எதிர்க்காத காரணத்தால் நீதிமன்றம் வழக்கை இடைநிறுத்தியுள்ளது. பெரும்பாலும் அடுத்த வழக்குத் தவணையின் போது சட்டமா அதிபரின் சிபாரிசின் பேரில் வழக்கு வாபஸ் பெறப்படலாம் என்று அறிய முடிகின்றது.
ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் அண்மைக்காலமாக வாபஸ் பெற்றுக் கொள்ளப்படும் நிலையில் இந்த வழக்கும் அந்த வரிசையில் மிக விரைவில் சோ்ந்து கொள்ளும்.
ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ரத்வத்தையின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான லொகான் ரத்வத்தை ஆகியோர் அரசியலில் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar topics
» திஸ்ஸமஹாராமையில் ஜனாதிபதியின் பிரசார நடவடிக்கை பிசுபிசுப்பு
» ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினர் விசேட அதிரடிப்படையினரால் நையப்புடைக்கப்பட்டுள்ளனர்
» ஜனாதிபதியின் மாவட்டத்தின் வீரவிலவில் அடிவாங்கிய ஆளும்கட்சி
» தங்காலையில் ஜனாதிபதியின் குண்டர்கள் முஸ்லிம் வாக்காளர்களை ஆயுத முனையில் மிரட்டல்
» கரு ஜயசூரியவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தயார்: ஐ.தே.க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum