தங்காலையில் ஜனாதிபதியின் குண்டர்கள் முஸ்லிம் வாக்காளர்களை ஆயுத முனையில் மிரட்டல்
Page 1 of 1

தங்காலையில் முஸ்லிம் வாக்காளர்கள் செறிவாக வாழும் பகுதிகளில் ஆயுதமேந்திய ஆளுங்கட்சி குண்டர்கள் வாக்களிக்கச் செல்ல வேண்டாம் என்று மிரட்டல் விடுப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தொடக்கம் தங்காலையில் தங்கியிருக்கும் நிலையில் பிரதேசத்தின் பாதுகாப்பு என்றுமில்லாதவாறு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களிலும் வீதிச் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆயினும் ஜனாதிபதியின் ஆசீர்வாதம் பெற்ற மற்றும் நாமல் ராஜபக்ஷவின் நீலப்படையணியில் அங்கம் வகிக்கும் குண்டர்கள் ஆயுதங்களுடன் வந்து தங்காலையின் முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள மக்களை வாக்களிக்கச் செல்ல வேண்டாமென்று மிரட்டியுள்ளனர்.
தங்காலையில் நடக்கும் தோ்தல்களில் முஸ்லிம் வாக்குகளே திருப்பு முனையாக அமைவதன் காரணமாகவும், அவர்கள் எதிர்க்கட்சிக்கு வாக்களித்து விடலாம் என்ற அச்சம் காரணமாகவும் ஆளுங்கட்சிக்குண்டர்கள் அவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ரோசா மற்றும் உக்குவா ஆகிய பிரபல குண்டர்கள் ஆயுதங்கள் தாங்கிய நீலப்படையணி உறுப்பினர்களுடன் தற்போதும் தங்காலை முஸ்லிம் பிரதேசங்களில் உலாவிக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன் காரணமாக அங்குள்ள முஸ்லிம் மக்கள் வாக்களிப்பது குறித்து கடும் அச்சம் கொண்டுள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.

Similar topics
» இத்தாலியில் ஆயுத முனையில் கொள்ளையடித்த இலங்கையர் மூவர் கைது
» வாழைச்சேனை, முஸ்லிம் பாடசாலை மதிற்சுவரை உடைத்ததாக பௌத்த விகாரை நிர்வாகத்தின் மீது புகார்
» திஸ்ஸமஹாராமையில் ஜனாதிபதியின் பிரசார நடவடிக்கை பிசுபிசுப்பு
» ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினர் விசேட அதிரடிப்படையினரால் நையப்புடைக்கப்பட்டுள்ளனர்
» ஜனாதிபதியின் மாவட்டத்தின் வீரவிலவில் அடிவாங்கிய ஆளும்கட்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum