அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கொலைகாரர்களுக்கு அனுமதி வழங்கும் நிறுவனமாக ஐக்கிய நாடுகள் சபை - கும்புறுகமுவே வஜிர தேரர்

Go down

கொலைகாரர்களுக்கு அனுமதி வழங்கும் நிறுவனமாக ஐக்கிய நாடுகள் சபை - கும்புறுகமுவே வஜிர தேரர் Empty கொலைகாரர்களுக்கு அனுமதி வழங்கும் நிறுவனமாக ஐக்கிய நாடுகள் சபை - கும்புறுகமுவே வஜிர தேரர்

Post by priyanka Thu Mar 24, 2011 10:09 am

ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச சக்திகளின் கைப்பொம்மையாகவும், கொலைகாரர்களுக்கு அனுமதி வழங்கும் நிறுவனமாகவும் தற்போது செயற்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபை மீது எமக்கிருந்த நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது என தேசிய ஐக்கியத்துக்கான சர்வமத கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே தேசிய ஐக்கியத்துக்கான சர்வமத கூட்டமைப்பின் உறுப்பினரும் சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தருமான கும்புறுகமுவே வஜிர தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

லிபியா மீது சர்வதேச நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் ஐக்கிய நாடுகள் சபை இதனை கண்டிக்காமல் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றது.

உலக சமாதானம், அமைதி, நீதி, நேர்மை என்பதை காப்பற்றுவதற்காக அமைக்கப்பட்ட நிறுவனமான ஐக்கிய நாடுகள் தற்போது லிபியா மீது தாக்குதல் நடத்தி கொலைகளை செய்வதற்கு மேற்கத்தைய நாடுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

கொலைகாரர்களுக்கு அனுமதி வழங்கும் நிறுவனமாக தற்போது ஐக்கிய நாடுகள் சபை உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மீது எமக்கிருந்த நம்பிக்கை தற்போது இல்லாமல் போய்விட்டது.

உலக சமாதானத்தை காப்பாற்ற வேண்டிய முக்கியமான நாடுகள் பல ஒன்றிணைந்து லிபியாவில் மனிதாபிமானமற்ற வகையில் தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்றன.

தமது சூழ்ச்சியாளர்களை குறித்த நாடுகளுக்கு அனுப்பி அங்கு உள்நாட்டு குழப்பங்களை ஏற்படுத்துவதே சர்வதேச சக்திகளின் நடவடிக்கையாகும்.

ஈராக்கிற்கும் இதனையே செய்தனர் என்பதை நாம் கடந்த காலத்தில் கண்டோம். சதாம் ஹுசைனை எந்தவொரு காரணமுமின்றி கொலைசெய்தனர்.

லிபிய அதிபர் கேர்ணல் கடாபி மேற்கு நாடுகளுக்கோ, சர்வதேச சக்திகளுக்கோ அடிபணிந்தவர் அல்லர்.

கடாபியை மண்டியிடச் செய்ய வேண்டும் என மேற்கு நாடுகள் பல தடவைகள் முயற்சி செய்தபோதிலும் அதனை செய்ய முடியாமல் தடுமாறியதை நாம் கண்டுள்ளோம்.

லிபியாவின் உள்விவகாரத்தில் ஏனைய நாடுகள் தலையிட வேண்டிய அவசியமில்லை என்றார்.

கடந்த 2009 ல் வன்னியில் இலங்கை படையினரால் பெருமளவான தமிழர்கள் படுகொலை நடைபெற்றுக்கொண்டிருக்கையில் இந்த சர்வமத கூட்டமைப்பு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
priyanka
priyanka
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜனாதிபதிக்கு நீதித்துறையின் மேலதிக அதிகாரங்களை வழங்கும் 19 வது திருத்தச்சட்டம் மிக விரைவில்
» இலங்கைக்கு போரில் உதவிய நாடுகள் விசாரணைகளுக்கு முகம் கொடுக்குமா?
» ஐக்கிய நாடுகளுக்கெதிராக அரசாங்கம் நேரடி எதி்ர்ப்பை வெளிக்காட்டாது
» இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டு வர ஐரோப்பிய நாடுகள் முயற்சி – சார்லி மகேந்திரன்
» ஐக்கிய தேசியக் கட்சியின் உட்பூசல் தீர்க்கப்பட்டமையால் ஜனாதிபதிக்கு அதிருப்தி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum