அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஐக்கிய தேசியக் கட்சியின் உட்பூசல் தீர்க்கப்பட்டமையால் ஜனாதிபதிக்கு அதிருப்தி

Go down

ஐக்கிய தேசியக் கட்சியின் உட்பூசல் தீர்க்கப்பட்டமையால் ஜனாதிபதிக்கு அதிருப்தி  Empty ஐக்கிய தேசியக் கட்சியின் உட்பூசல் தீர்க்கப்பட்டமையால் ஜனாதிபதிக்கு அதிருப்தி

Post by Admin Fri Mar 25, 2011 4:29 pm

ஐக்கிய தேசிய கட்சியின் உட்பூசல்கள் தணிக்கப்பட்டமை காரணமாக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதிருப்தியுடன் இருப்பதாக லங்கா வெப் நியூஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தலைவர், அரசாங்க ஊடகங்களை, ஐக்கிய தேசிய கடசியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த செய்தி ஒன்றை பிரசுரிக்க தயாராக இருக்குமாறு கடந்த புதன்கிழமை காலையே கோரியிருந்தார்.

எனினும் சஜித் பிரேமதாஸ பின்னர் பிரதி தலைவராக பொறுப்பேற்று கட்சியின் குழப்ப நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டமையைத் தொடர்ந்து, அவர்களும் மனச்சோர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், மறுநாளை காலையில் கரு ஜெயசூரியவுக்கும், ரணிலுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க ஊடகங்களில் செய்தியை வெளியிடுமாறு, ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தலைவர் கோரியிருந்தார் என்றும் லங்கா வெப் நியூஸ் குறிப்பிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் மறுநாள் காலை வியாழக்கிழமை, அரச ஊடகங்களில் ரணிலுக்கும் கரு ஜெயசூரியவுக்கும் இடையில் பிளவு என்ற அடிப்படையில் செய்தி வெளியானது. எனினும் அது பாரியளவில் மக்கள் மத்தியில் எடுபடவில்லை.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்க இந்த அரசு தயார் இல்லை - ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய
» ஐக்கிய தேசியக் கட்சி இனவாதத்தை தூண்டுகிறது : நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு
» ஜனாதிபதிக்கு நீதித்துறையின் மேலதிக அதிகாரங்களை வழங்கும் 19 வது திருத்தச்சட்டம் மிக விரைவில்
» யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களின் நடத்தை குறித்து அதிருப்தி
» ஐக்கிய நாடுகளுக்கெதிராக அரசாங்கம் நேரடி எதி்ர்ப்பை வெளிக்காட்டாது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum