அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அதிகாரப் பகிர்வு யோசனைகளை த.தே.கூட்டமைப்பு ஏப்ரலில் முன்வைக்கும் - மாவை எம்.பி தெரிவிப்பு

Go down

அதிகாரப் பகிர்வு யோசனைகளை த.தே.கூட்டமைப்பு ஏப்ரலில் முன்வைக்கும் - மாவை எம்.பி தெரிவிப்பு Empty அதிகாரப் பகிர்வு யோசனைகளை த.தே.கூட்டமைப்பு ஏப்ரலில் முன்வைக்கும் - மாவை எம்.பி தெரிவிப்பு

Post by priyanka Thu Mar 24, 2011 10:09 am

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏப்ரல் 27ம் திகதி அரசாங்கத்தின் தூதுக் குழுவை சந்திக்கும்போது அதிகாரப் பகிர்வு குறித்த யோசனைகளை சமர்ப்பிக்கவுள்ளதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையானது இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தரத் தீர்வை வழங்குவதுடன் தமிழ் மக்களின் மனத்தாங்கலையும் தீர்த்துவைக்கும் என தான் நம்புவதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அரசாங்கமும் த.தே.கூட்டமைப்பும் ஏப்ரல் 07 மற்றும் 27 ஆம் திகதிகளில் சந்திக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குதல், புனர்வாழ்வு நிலையங்களில் தங்கியுள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை விடுதலை செய்தல், மீள்குடியேற்றம் என்பன தொடர்பில் 07ம் திகதி நாம் பேசவுள்ளோம்.

புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள தமிழ் இளைஞர்களின் விபரங்களை அரசாங்கம் வெளியிடவுள்ளமை பாராட்டுக்குரிய ஒரு விடயமாகும்.

பதினொராயிரம் இளைஞர்கள் புனர்வாழ்வு முகாம்களில் உள்ளதாக நாம் நம்புகிறோம். அரசாங்கம் இவர்களை இயன்றளவு விரைவில் விடுவிக்கவேண்டும். அல்லது இவர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கான சான்றுப் பொருட்கள் இருப்பின் அரசாங்கம் வழக்குத் தொடர வேண்டும்.

அதேவேளை கடந்த ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

த.தே.கூட்டமைப்பு தூதுக்குழுவில் மாவை சேனாதிராஜா எம்.பி. தலைமையில் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஏ.சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணி கனகேஸ்வரன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
priyanka
priyanka
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» 13 வது திருத்த சட்டம் தீர்வு ஆகாது: அதிகாரப் பகிர்வே தமிழரின் இலக்கும் இறுதித் தீர்மானமும்!- தமிழ் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம்
» பிரிட்டன் மாணவர் விஸாவிற்கு புதிய விதிமுறை ஏப்ரலில் அமுல் - உயர்ஸ்தானிகரகம்
»  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி: சென்னை உயர்நீதிமன்றில் தெரிவிப்பு
» சகல மக்களினதும் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் அதிகாரப் பரவலாக்கல் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்: ஆஸி.பாராளுமன்ற உறுப்பினர்
» விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் பிரெஞ்சுப் பிரஜைகள் என காவல்துறை தெரிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum