சகல மக்களினதும் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் அதிகாரப் பரவலாக்கல் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்: ஆஸி.பாராளுமன்ற உறுப்பினர்
Page 1 of 1

இலங்கையில் வாழும் சகல மக்களினதும் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் வகையில் அதிகாரப் பரவலாக்கல் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அவுஸ்திரேலியப் பாராளுமன்ற உறுப்பினரொருவர் வலியுறுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலிய லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோன் அலெக்சாண்டர் என்பவரே அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலையான சமாதானத்துக்கு அதிகாரப் பரவலாக்கல் செயற்படுத்தப்படுவது மிக முக்கியம். அது நாட்டின் சகல மக்களினதும் நியாயமான அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்க வேண்டும்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவான 13வது அரசியல் திருத்தச் சட்டத்தின் கீழ் நடைமுறைச்சாத்தியம் கொண்ட அதிகாரப் பகிர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும்.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்தும் தற்போது பலமாகக் குரல் எழுப்பப்பட்டு வருகின்றது. உலகில் எந்த மூலையில் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.
அதே நேரம் இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கும் ஆதரவு வழங்க வேண்டும். அதன் மூலமாக மட்டுமே யுத்தத்தின் பாதிப்புகளிலிருந்து மீளத் துடிக்கும் மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட முடியும் என்றும் அவர் தனது உரையின் போது மேலும் தெரிவித்துள்ளார்.

Similar topics
» கணவனிடம் அடிவாங்கிய ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவமனையில்
» ஐ.நா. அறிக்கையை ஆதரித்தால் “புலி” எதிர்த்தால் “சிங்கமா”?– பா.அரியநேத்திரன் பாராளுமன்ற உறுப்பினர்
» பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீதான புகார் விசாரணை ஆரம்பம்
» பார்வதியம்மாவின் மறைவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர். பா.அரியநேத்திரன் ஆழ்ந்த அஞ்சலிகள்.
» இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என ஐ.நா. பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்!- திருமாவளவன் கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum