அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஐ.நா. பாதுகாப்புச் சபை நாடுகளுக்கு நிலைமையை விளக்க அரசு தயார்! சிக்கலைச் சமாளிக்க அதிதீவிர முயற்சி

Go down

ஐ.நா. பாதுகாப்புச் சபை நாடுகளுக்கு நிலைமையை விளக்க அரசு தயார்! சிக்கலைச் சமாளிக்க அதிதீவிர முயற்சி  Empty ஐ.நா. பாதுகாப்புச் சபை நாடுகளுக்கு நிலைமையை விளக்க அரசு தயார்! சிக்கலைச் சமாளிக்க அதிதீவிர முயற்சி

Post by kaavalan Sun May 01, 2011 7:41 pm

ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கைக்கு இதுவரை உத்தியோகபூர்வமாகப் பதிலளிக்காத இலங்கை அரசு, அந்த அறிக்கைக்கு எதிரான தனது நிலைப்பாட்டை விளக்கி ஐ.நா. பாதுகாப்புச்சபையில் அங்கம் வகிக்கும் வீற்றோ அதிகாரம் கொண்ட 5 நாடுகளுக்கும், நிரந்தர உறுப்பினர்கள் அல்லாத 10 நாடுகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடிதம் அனுப்பி வைக்கவுள்ளார்.

நிபுணர் குழுவின் அறிக்கை அடிப்படைகள் அற்றது, தவறான உள்ளீடுகளால் உருவாக்கப்பட்டது என்று கூறி அதனை அடியோடு நிராகரித்துள்ளது அரசு. எனினும், இந்த அறிக்கையால் உலக அரங்கில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று அது அஞ்சுகிறது.

எனவே, அதனைச் சமாளிப்பதற்குத் தேவையான இராஜதந்திரப் போரை அது முன்னெடுத்து வருகின்றது. அதேசமயத்தில் நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கு நெருக்கடிகளைக் கொடுக்க அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் முயற்சித்து வருகின்றன.

எதிர்வரும் 3ஆம் திகதி இலங்கை வரவுள்ள, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் அறிக்கை தொடர்பில் அமெரிக்காவின் எதிர்ப்பார்ப்பு என்ன என்பதை இலங்கைத் தலைவர்களுக்கு விளக்க உள்ளார்.

அறிக்கை வெளியாவதற்கு முன்னரே பிளேக்கின் பயணம் திட்டமிடப்பட்டு விட்டது என்றாலும், இலங்கை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுடனான சந்திப்பின் போது நிச்சயம் அவர் அறிக்கை விடயத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வார் என்று நியூயோர்க்கில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கு முன்னோடியாக, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதர் பற்றீசியா புட்டினன், கடந்த வியாழக்கிழமை கொழும்பிலுள்ள ஏனைய நாடுகளின் இராஜதந்திரிகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடியுள்ளார்.

இந்தியா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், நெதர்லாந்து, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், நோர்வே, தென்னாபிரிக்கா, தென்கொரியா, சுவிற்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளின் முக்கிய இராஜதந்திரிகள் இந்த இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். கொழும்பிலுள்ள ஐ.நா. அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இலங்கையில் நிலைத்து நிற்கக்கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நிபுணர் குழுவின் அறிக்கை எந்த வகையில் உதவும் அல்லது உதவ முடியும் என்பது தொடர்பாகவே இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.

அதேவேளையில், ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வீற்றோ அதிகாரத்தைக் கொண்டுள்ள ரஷ்யா மற்றும் சீனா ஆகியன, அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் உள்விவகாரங்களில் ஐ.நா. தலையிடக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளன.

எனினும், அறிக்கை ஐ.நா. பாதுகாப்புச் சபையிலேயோ மனித உரிமைகள் சபையிலேயோ சமர்ப்பிக்கப்படலாம் என்ற அச்சம் கொழும்பில் அரசியல் தலைமையிடம் நிலவுகிறது. அவ்வாறான ஒரு சூழலில் இலங்கையைப் பாதுகாக்கக்கூடிய இராஜதந்திர நடவடிக்கைகளில் கொழும்பு தீவிரம் காட்டி வருகின்றது.

அதற்காகவே அறிக்கை தொடர்பான இலங்கையின் நிலைப்பாட்டை விளக்கி ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளுக்கும் கடிதங்களை அனுப்ப ஜனாதிபதி முடிவெடுத்துள்ளார்.

அந்தக் கடிதத்துடன் இணைப்பு ஆவணம் ஒன்றும் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் கூறினர். அநேகமாக அது, இறுதிப் போர் தொடர்பாகப் பாதுகாப்பு அமைச்சு தயாரித்த வெள்ளை அறிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் அடுத்த கட்டமாக பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளுக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேரில் சென்று அரசின் நிலைப்பாட்டை விளக்க உள்ளார்.

போர் முடிவடைந்துள்ள சூழலில் ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுப்பது இலங்கையின் எதிர்காலத்துக்கும் இன நல்லிணக்கத்துக்கும் பாதிப்பாக அமையும் என்பதால் உலக நாடுகள் அத்தகைய முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கக்கூடாது என்பதே இலங்கை அரசின் வாதமாக முன்வைக்கப்பட உள்ளது என்று இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதற்குப் பதில் அதற்கு வெளியே பிரச்சினையைக் கையாண்டு சிக்கலைத் தவிர்க்கப் பார்க்கிறது இலங்கை என்று புதுடில்லியைச் சேர்ந்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்க இந்த அரசு தயார் இல்லை - ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய
» நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இராஜதந்திரிகளின் மூலம் உலக நாடுகளுக்கு விளக்கம்
» பிரிட்டன் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வருகை: எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுமா?
» பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் மன்னிப்புக் கோரும் பிரதமர் டீ.எம். ஜயரத்ன
» இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அறிக்கை! உறுப்பு நாடுகளுக்கு பான் கீ மூன் கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum