அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

என் மீது போர்க்குற்றமா? - மேதினக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ச கேள்வி

Go down

என் மீது போர்க்குற்றமா? - மேதினக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ச கேள்வி  Empty என் மீது போர்க்குற்றமா? - மேதினக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ச கேள்வி

Post by kaavalan Mon May 02, 2011 4:26 pm

வன்னியில் இடம்பெற்ற போரின்போது விடுதலைப்புலிகளைத் தோற்கடித்ததைச் சிலர் போர்க்குற்றம் என்கின்றனர். சிலர் மனித உரிமை மீறல் என்கின்றனர். ஒரு இனத்தை அழிவிலிருந்து மீட்டது மனித உரிமை மீறலா? என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
மே தினத்தை முன்னிட்டு ஆளும் ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பினால் கொழும்பு நகர மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் கூறியதாவது,

இலங்கையில் மனிதவுரிமை மீறல் நடந்துள்ளதாக அறிக்கை தயாரிப்பவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இந்த அறிக்கையை யார் தயாரித்தார்கள் என நான் கேட்கப் போவதில்லை. என்னை மின்சார நாற்காலிக்குக் கொண்டு செல்லப் போகின்றனராம். நாங்கள் பிரபாகரனின் தந்தைக்கே ஓய்வூதியம் கொடுக்க அறிவித்திருந்தவர்கள். அது மட்டுமன்றி தற்கொலைத் தாக்குதல் நடத்தவந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அமைதியை நாடிச் சென்றவர்கள்.

நாட்டில் மனிதவுரிமைகள் இடம்பெற்றதாக பொய்க்குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்த எவரும் முனைய வேண்டாம் எனவும் மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார்.

யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் சுமார் 3 இலட்சம் மக்களை மீட்கும் நடவடிக்கையை ஐ.நா. முகவர் நிறுவனங்கள் எதிர்பார்த்ததைவிட அரசாங்கம் மனிதாபிமான ரீதியாகவும் கவனமாகவும் மேற் கொண்டது. அதிக எண்ணிக்கையான மீட்பு நடவடிக் கையை வெற்றிகரமாக மேற்கொண்ட ஒரே நாடாக இலங்கை விளங்குகிறது. வரலாற்றில் எந்தவொரு நாடும் இவ்வளவு பாரிய மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டதில்லை.

நாட்டின் சட்டபூர்வமான படைகளுக்கு எதிராகப் போராடிய பெரும் எண்ணிக்கையான போராளிகளைக் காப்பாற்றி, அவர்களுக்குப் புனர்வாழ்வளித்து, பல்கலைக்கழக மட்டம் வரையிலான கல்வியும் வாழ்க்கைத்திறன் பயிற்சிகளையும் அளித்து ஏன் திருமணம் கூட செய்து வைத்து அவர்களைச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கும் பிரஜைகளாக சமூகத்திற்கு அனுப்பி வைத்ததாக வேறு எந்த இராணுவமும் கூறமுடியாது.

இது இலங்கை கொண்டுள்ள தனிச்சிறப்புக்குரிய சாதனையாகும். இதைத்தான் சில குழுக்களும் அமைப்புகளும் போர்க்குற்றம் எனவும் மனித வுரிமை மீறல்கள் எனவும் கூறுகிறார்கள்.

இடம்பெயர்ந்த மக்களுக்காக 3 இலட்சம் பேருக்கு போதுமான உணவுப் பொருட்களை அனுப்புமாறு உலக உணவுத்திட்டம் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியது. ஆனால் அரசாங்கம் 3 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு போதுமான உணவை அனுப்பியது. இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் தற்காலிக முகாம்களுக்கு அனுப்பிய பின் அங்கு மேலதிகமாகவிருந்த உணவுப் பொருட்களை அரசாங்கம் திருப்பி எடுத்துக்கொண்டு வரவேண்டியிருந்தது.

சில ஆயிரம் டொலர்களுக்காக நாட்டைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் என சில அரச சார்பற்ற நிறுவனங்களையும் ஏனைய அமைப்புகளையும் கோருவதாகவும் ஜனாதிபதி கூறினார்.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» கேர்ணல் கடாபியுடன் மஹிந்த ராஜபக்ச தொடர்பு கொண்டார்
» மஹிந்த ராஜபக்ச மதவாத பிடியில் சிக்கியுள்ளார் - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்
» ஐக்கிய தேசியக் கட்சி இனவாதத்தை தூண்டுகிறது : நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு
» ஐ.நா.நிபுணர் குழு பொன்சேகாவை சந்திக்க அரசு அனுமதி வழங்குமா? - ஐ.தே.க.கேள்வி
» தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ஆளும் கட்சி ஆதரவாளர்கள் இருவர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum