அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யாழ். அளவெட்டிப் பகுதியில் வாழைக்குலைகளைத் திருடிவரும் இராணுவத்தினர்

Go down

யாழ். அளவெட்டிப் பகுதியில் வாழைக்குலைகளைத் திருடிவரும் இராணுவத்தினர் Empty யாழ். அளவெட்டிப் பகுதியில் வாழைக்குலைகளைத் திருடிவரும் இராணுவத்தினர்

Post by MayA Sat Dec 18, 2010 11:25 am

யாழ்.அளவெட்டிப் பகுதியில் அண்மைக்காலங்களில் இலங்கை இராணுவத்தினரால் இரவுநேரங்களில் தோட்டங்களில் வாழைக்குலை மற்றும் மரக்கறிப் பயிர்களை திருடி வருவது குறித்து அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் அளவெட்டி மேற்கு தம்பனைப் பகுதியில் கமநல சேவைகள் திணைக்களத்துகுச் சொந்தமான கட்டிடத்தில் முகாமிட்டுள்ள இலங்கை இராணுவத்தினரே இவ்வாறான திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக நேரடியாக கண்ணுற்ற அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பகுதியில் இரவு நேரங்களில் நடமாடித்திரியும் சீருடையினர் அப்பகுதி ஏழை விவசாயிகளினால் பயிடப்பட்டுள்ள வாழைக்குலைகழையும் மரக்கறிப் பயிர்களையும் திருடி வருவதாகவும் மேலும் யாழ்ப்பாணத்திற்கு அண்மைக்காலங்களில் சுற்றுலாவுக்காக வரும் படையினரின் உறவினர்கள் திரும்பிச் செல்கையில் அவர்களின் வாகனங்களில் அவற்றை ஏற்றி அனுப்புவதும் வாடிக்கையாகியுள்ள நிலையில் ஜீவனோபாயத்திற்காக பயிர்செய்கையில் ஈடுபட்டுள்ள தமிழ் ஏழை விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர்.

இது தொடர்பாக முறையிடக்கூட அச்சமடைந்த நிலையில் தமது குடும்ப வருமானத்தையும் இழந்த நிலையில் செய்வதறியாது உள்ளதாக அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சங்கானைப்பகுதியில் ஆலய பூசகரின் வீட்டில் திருடச்சென்ற கொள்ளையர்களுக்கு படையினர் துப்பாக்கியை வழங்கி உதவியிருந்தமையயும் அம்பலமாகியுள்ள நிலையில் யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலங்களில் ஆயுதமுனையில் கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றமையாலும் குடாநாட்டு மக்கள் இரவு நேரத்தை பீதியடைந்த நிலையிலேயே கழிக்கவேண்டி ஏற்பட்டுள்ளது.
MayA
MayA
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics
» யாழ்.இணுவில் பகுதியில் இரு மாணவர்களை காணவில்லை
» இலங்கை இராணுவத்தினர் என்ன மனிதர்களா இல்லை அரக்கர்களா? நாம் புலிப்பால் குடித்த பரம்பரை - விஜய்
» சுவிட்சர்லாந்தின் மேற்குப் பகுதியில் வெள்ளம் ஏற்படக் கூடிய அபாயம்
» 20 வருடங்களுக்கு மேலாக தீவகப் பகுதியில் பூட்டப்பட்டிருந்த இரண்டு பாதைகள் திறந்துவைப்பு
» பாரிஸ் புறநகர் பகுதியில் இரு தமிழ் குழுக்களுக்கிடையில் மோதல்- இளைஞர் ஒருவர் படுகொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum