அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மட்டக்களப்பின் வெள்ள நிவாரண மீளாய்வுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு இல்லை

Go down

மட்டக்களப்பின் வெள்ள நிவாரண மீளாய்வுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு இல்லை  Empty மட்டக்களப்பின் வெள்ள நிவாரண மீளாய்வுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு இல்லை

Post by kaavalan Sun Feb 27, 2011 4:19 am

நாளை (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பில் நடைபெறவுள்ள வெள்ள நிவாரண மீளாய்வுக் கூட்டத்திற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு குற்றம் சாட்டுகின்றது.
ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு செயலகத்தில் வெள்ள நிவாரணம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. அதில் பங்குகொள்ளுமாறு பல தரப்பினருக்கும் அரச அதிபர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆயினும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பான்மை மக்களின் ஆணையைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் எவருக்கும் கூட்டத்தில் பங்குபற்றுவதற்கான அழைப்பு விடுக்கப்படவில்லை.

மக்களின் அபிவிருத்திப் பணிகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வந்திருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இவ்வாறு புறக்கணிக்கப்படுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum