தமிழ்மக்கள் கௌரவமாக நடாத்தப்படுவார்களென இலங்கை இந்தியாவிடம் உறுதியளித்துள்ளது: மன்மோகன் சிங்
Page 1 of 1

இலங்கையில் வாழும் தமிழர்கள் கௌரவமாக நடாத்தப்படுவார்கள் என்று இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் உறுதியளித்துள்ளதாக இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் தெரிவிக்கின்றார்.தமிழக மீனவர்கள் கடலில் எதிர்கொள்ள நேரிட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் இலங்கைத் தமிழ்மக்கள் பிரச்சினைகள் குறித்து இன்று பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் இன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் பிரதமர் மன்மோகன் சிங் நீண்ட உரையொன்றை ஆற்றினார். அதன் போது அவர் மேலும் பல விடயங்கள் தொடர்பிலும் கருத்து வெளியிட்டார்.
இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் இராஜதந்திர ரீதியில் அழுத்தமான கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கு இலங்கை அரசாங்கம் சாதகமான பதில் அளித்துள்ளது.
இலங்கையில் வாழும் தமிழ் மக்களை கௌரவமான முறையில் நடாத்துவதாக இலங்கை அரசாங்கத்தின் சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்றுவார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்.
எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை இனி வரும் காலங்களில் எக்காரணம் கொண்டும் சுடக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளோம். அதற்குப் பதிலாக அவர்களைக் கைது செய்ய மட்டும் நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்றும் அவர் தன் உரையில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» தமிழக மீனவர் சிறைப்பிடிப்பு - இலங்கைக்கு மன்மோகன் சிங் கண்டனம்
» இலங்கை அரசாங்கத்தின் பிடிவாதக்கொள்கையில் மாற்றம்! ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவுள்ளது
» இலங்கை இந்தியாவுக்கு எதிராக செயற்படாது - இலங்கை அரசாங்கம்
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» கிழக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum