இலங்கையில் தொடரும் “இந்திய புராணமும்” பாதிக்கப்படும் அப்பாவி மக்களும்
Page 1 of 1
இலங்கையில் தொடரும் “இந்திய புராணமும்” பாதிக்கப்படும் அப்பாவி மக்களும்
இலங்கையில் தமிழ் மக்கள் தங்களை சிங்கள ஆட்சியாளரின் அடிமைச் சங்கிலியிருந்து விடுவித்துக் கொள்ள ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்தபோது போராளிகளுக்கு பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்து ஊக்குவித்ததுடன் விடுதலைக்காக போராடும் இயக்கங்களின் எண்ணிக்கையை அதிகரித்து.....
அதன் மூலம் போராடும் பலத்தை திட்டமிட்டு குறைக்கவும் நசுக்கவும் இந்தியா எண்ணியபடி அதில் வெற்றியும் கண்டது.
அன்றிலிருந்து இலங்கையில் தமிழர் பிரச்சனையோ அன்றி தமிழர் போராட்டமோ எதனை நோக்கினாலும் அதிலிருந்து இந்தியாவை தவிர்க்க முடியாமல் போய்விட, தொடர்;ச்சியாக தமிழ் மக்கள் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டே வந்துள்ளார்கள்.
நமது கடந்த கால ஆயுதப்போராட்டம் மற்றும் அதனோடு இணைந்த வெற்றிகள் தோல்விகள் பற்றி இந்தப்பக்கத்தில் எழுதுவதுதான் இவ்வாரக் கதிரோட்டத்தின் நோக்கம் அல்ல. மாறாக இலங்கையில் தொடர்ச்சியாக பாடப்பட்டு வரும் “இந்தியா புராணம்” யாருக்கு நன்மையை தோற்றுவித்துள்ளது என்பதைப் பற்றியே நாம் இப்போது பார்க்க வேண்டியுள்ளது.
விடுதலைப் புலிகளை தோற்கடிக்க இலங்கை அரசிற்கு இந்தியா உதவி செய்தது என்று கூறுவதிலும் பார்க்க இந்தியாதான் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடத்தியது என்பதுதான் உலக அரசியல் விமர்சகர்களால் கண்டறியப்பட்ட உண்மை.
இவ்வாறு முள்ளிவாய்க்கால் அனர்த்தங்களுக்கு முன்பும் பின்பும் இலங்கையில் தொடர்ச்சியாக அந்த “இந்திய புராணம்” இலங்கையில் பாடப்பட்டே வருகின்றது. விடயம் என்ன என்ற வினாவிற்கே இடமின்றி எல்லாவற்றுக்கும் இந்தியாதான் என்ற நிலை அந்த நாட்டில்.
ஆனால் அண்மையில் விஸ்வரூபமெடுத்து நின்ற தமிழக மீனவர் பிரச்சனையை எவ்வாறு இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து அதை யாழ்ப்பாண மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையிலான பிரச்சனையாக மாற்றி அதில் யாழ்ப்பாண மீனவர்களை சம்பந்தப்படுத்தி அவர்களைக் கொண்டு தமிழக மீனவர்களை கைப்பற்றி அவர்களை இலங்கைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கச் செய்து, அதன் மூலம் தமிழக மீனவர்களுக்கு உள்ள பிரச்சனை இலங்கைக் கடற்படையோடு அல்ல! அது தமிழக மீனவர்களுக்கும் யாழ்ப்பாண மீனவர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனை என்ற தோற்றத்தை கொண்டுவந்து அதன் மூலம் அதிக பலனடைந்தது இலங்கை அரசும் இந்திய அரசும் தான். கொடிய படுகொலைகளை நடத்திய இலங்கைக் கடற்படை தற்போது எவ்வித குற்றமும் செய்யாத அணியாக பார்க்கப்படும் ஒரு மாயை தமிழக மீனவர்கள் மத்தியில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த விடயம் இலங்கையில் 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்கப்போவதான வாக்குறுதி அளித்த இந்தியாவின் தந்திரம். வாரா வாரம் இந்த 50 ஆயிரம் வீடுகள் சம்பந்தமான செய்திகள் இலங்கை ஊடகங்களில் சேர்க்கப்பட்டு, அதன் மூலம் “இந்தியா புராணம்” மிகவும் அழகாகப் பாடப்பட்டு வருகின்றது.
ஆனால் நேற்று முன்தினம் இலங்கைப் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் “இந்தியா உறுதியளித்த 50 ஆயிரம் வீடுகளில் எத்தனை வீடுகள் இதுவரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன” என்று கேட்டார். அதற்கு பதிலாக உண்மையிலேயே பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் பற்றிய விபரம் இன்னும் சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை என்பதுதான்.
இங்கும் இந்தியா புராணம் பாடப்படுகின்றது. ஆனால் அப்பாவி மக்கள் தான் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றார்கள். பாவம் நமது அப்பாவி மக்கள். உண்மையிலேயே பாதிக்கப்பட்ட 500 பேருக்காவது வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டால் தற்போது பாடப்பட்டு வரும் “இந்தியா புராணத்தால்” மக்களுக்கு சிறிதளவு பலன் கிடைத்தது என்று எதிர்பார்க்கலாம். ஆனால் நடப்பதோ…….
இது இவ்வாறிருக்க கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய அமைச்சர் ஒருவர் தனது உரையிலும் இந்திய புராணத்தையே பாடியுள்ளார். அவர் தனது உரையில் “ இலங்கையின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் இந்தியாவை ஒருபோதும் நாம் தவிர்த்து விட முடியாது” என்று கூறியுள்ளமை, இந்தியாவை துதிபாடும் இலங்கையில் தொடர்ச்சியான நடவடிக்கையை காட்டுகின்றது.
இவ்வாறு இலங்கையில் தொடர்ச்சியாக பாடப்படும் “இந்திய புராணமானது” இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையையும் தராது தொடர்ந்து இந்தியாவை காப்பாற்றும் தந்திரமான புராணமாக இருக்கும் என்றே உதயன் நம்புகின்றான்.
கனடா உதயன்: கதிரோட்டம்.
theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» தமிழ்மக்களிற்கு எதிராக தொடரும் குற்றங்களை தடுத்து நிறுத்த சர்வதேச கண்டனம் தேவை
» இலங்கையில் அடைக்கலம் தேடும் பாகிஸ்தானிய யுவதிகள்
» இலங்கையில் இனவாத அடிப்படையில் அரசியல் முன்னெடுக்கப்படுகிறது – நவரட்ன பண்டார
» இலங்கையில் இந்த மாதம் கடும் வெப்பம் நிலவும் - வளிமண்டலவியல் திணைக்களம்
» தமிழ்மக்களிற்கு எதிராக தொடரும் குற்றங்களை தடுத்து நிறுத்த சர்வதேச கண்டனம் தேவை
» இலங்கையில் அடைக்கலம் தேடும் பாகிஸ்தானிய யுவதிகள்
» இலங்கையில் இனவாத அடிப்படையில் அரசியல் முன்னெடுக்கப்படுகிறது – நவரட்ன பண்டார
» இலங்கையில் இந்த மாதம் கடும் வெப்பம் நிலவும் - வளிமண்டலவியல் திணைக்களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum