போர்க்குற்றங்கள் குறித்து நல்லிணக்க ஆணைக்குழுவில் முறையிடலாம்: கரு ஜெயசூரியவிற்கு அரசாங்கம் ஆலோசனை
Page 1 of 1

போர்க்குற்றச் செயல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்து கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ய முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரியாவிற்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரின் போது குற்றச் செயல்கள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பான சாட்சியங்களுடன் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்க முடியும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, கரு ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான மீட்புப் பணிகளை இழிவுபடுத்தும் வகையில் கரு ஜயசூரிய கருத்து வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நாட்டின் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சஜித் பிரேமதாஸ புலிகள் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குறிப்பிடுகின்றார், கரு ஜயசூரிய போர்க் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென குறிப்பிடுகின்றார்.
இதன்படி கட்சிக்குள் இரண்டு நிலைப்பாடுகள் காணப்படுகின்றதா என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கரு ஜயசூரியவின் கருத்துக்கள் பிரிவினைவாதத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அமைந்துள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போர்க் குற்றச் செயல்கள் தொடர்பாகவோ அல்லது புலம்பெயர் தமிழர்கள் பற்றியோ தாம் குறிப்பிடவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்

Similar topics
» ஐ.நா.நிபுணர் குழுவை சந்திப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை - நல்லிணக்க ஆணைக்குழு
» தென்னிலங்கை மக்கள் தமிழைக் கற்று நல்லிணக்கத்துடன் வாழ விருப்பம்: நல்லிணக்க ஆணைக்குழு
» தமிழர்களின் உரிமைகள் குறித்து இலங்கை அரசு கவனத்திற் கொள்ளவேண்டும் – எஸ்.எம்.கிருஷ்ணா
» ஐரோப்பாவிலிருந்து புலி ஆதரவாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனரா என்பது குறித்து விசாரணை?
» யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களின் நடத்தை குறித்து அதிருப்தி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum